பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388

மீ

மீசை

மீசை பெ. (n.) I.பருவ அகவை எட்டியவுடன்மேல் உதட்டிற்கு மேல் வளரும் முடி; moustache. 'என்மாமா பெரிய மீசை வைத்திருப்பார். 2. விறைப்பான நீண்ட முடி போன்ற உணர்வு உறுப்பு; antenna.

மீசையை முறுக்குதல் வி. (v.) வீரத்தோடு சண்டையிட அணியம் என்ற தோரணை காட்டுதல்; challenge to a fight. 'நான் யார் என்று தெரியாமல் என்னிடமே மீசையை முறுக்கு கிறான்.

மீட்டுதல் வி. (v.) I. வீணை, நரம் பொத்தியம் (தம்பூரா) போன்ற இசைக் கருவிகளின் கம்பியை மென்மையாக அதிரச் செய்தல்; pluck the strings. தம்பூராவை மீட்டிக் கொண்டு பாடத் தொடங்கினார். 2. அடகு வைத்ததைத் திரும்பப் பெறுதல்; get back, redeem. 3. நினைவு கூர்தல்;recall.

மீட்டுருவாக்கம் பெ. (n.) வழக்கிலிருந்து மறைந்து போனவற்றுக்குப் புத்துயிர் கொடுத்தல்; revival. 'நாட்டுப்புறக் கலைகள் இப்போது மீட்டுருவாக்கம் செய்யப்படுகின்றன’.

மீட்டெடுத்தல் வி. (v.) பழைய கருத் தாக்கத்தைத் தற்காலச் சூழலுடன் பொருத்திப் புத்துயிர் பெறச்செய்தல்;

revive.

மீட்பு பெ. (n.) I. வெள்ளம், நிலநடுக்கம் போன்றவற்றால் துன்பப்பட்டவர் களைக் காப்பாற்றும் நடவடிக்கை; rescue. 2. ஒருவர் சட்ட முரணாக வைத்திருக்கும் பொருட்களை கைப் பற்றப்படும் நடவடிக்கை; confiscation, recovery.

மீண்டும் வி.அ. (adv.) மறுபடியும், திரும்பவும், மேலும்; again. நேற்று மீண்டும் மழை பெய்தது'.

மீண்டுவிடுதல் வி (v.) பழைய நிலையை அடைதல்; recovered.

மீதம் பெ. (n.) மீதி, மிச்சம்; unused portion; remainder. மீதம் வைக்காமல் சாப்பிட வேண்டும்.

மீதி பெ. (n.) ஒரு எண்ணிலிருந்து மற்றொரு எண்ணைக் கழித்த பின் எஞ்சியிருக்கும்; நிலுவை; remainder. ஐந்தில் இரண்டு போனால் மீதி மூன்று'.

மீள்தல் வி. (v.) 1. முன்பு இருந்த இடத்திற்குத் திரும்புதல்; retum, come back. 2. நோய், நேர்ச்சி போன்ற வற்றிலிருந்து பிழைத்தல்; escape. 3. விடுபடுதல் அல்லது நீங்குதல்; recover from; get over. *அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் இன்னும் மீளவில்லை.

மீளவும் வி.அ. (adv.) மீண்டும், திரும்பவும்; again. இந்நூல் மீளவும் பதிப்பிக்கப் படப்படுமானால் தமிழுலகம் பெரும் பயனடையும்'.

மீறல் பெ. (n.) சட்டம், உரிமை முதலிய வற்றை மீறும் செயல்; violation (of rules, rights, etc.,).

மீறுதல் வி. (v.) 1. ஒன்றை பின்பற்றாமல் அல்லது மதிக்காத முறையில் தடந்து கொள்ளுதல்; புறக்கணித்தல்;

transgress; violate break. 2. ஒன்றுக்கு உட்படாதபடி அல்லது கட்டுப்படாத படி ஆதல்; go beyond, overcome. 3. தடுக்கப்பட்ட நிலையைக் கடத்தல்; தாண்டி முன் செல்லுதல்; go past. மீன்காட்சியகம் பெ. (n.) தீர்வாழ் உயிரினங்கள் காட்சிக்கு வைக்கப்பட் டிருக்கும் இடம்; aquarium.