பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீன்படுதல் வி. (v.) நீர் நிலைகளில் மீன்கள் அதிக அளவில் காணப் படுதல்; (of fish) be abundantly available.

மீனவக்குப்பம் பெ. (n.) மீனவர்களின் வாழிடம்; a village of fisher man cast.

மு

முக்காடு பெ. (n.) தலையையும் முகத்தின் பெரும் பகுதியையும் மறைத்துக் கொள்வதற்காகத் தலைமேல்

போட்டு இழுத்துவிடப்பட்ட துணி; cloth spread over the head. வெயிலுக்காகத் துண்டை எடுத்து முக்காடு போட்டுக் கொண்டார். முக்காடு போட்டுக்கொள்ளுதல் வி. (v.) மற்றவர் பார்வையைத் தவிர்த்து ஒளிந்து கொள்ளுதல்; hide one's head. முக்கால் பெ.(n.) நான்கில் மூன்று பகுதி; three quarters. மணி ஒன்றே முக்கால்.

முக்கால்புள்ளி பெ. (n.) எழுதும்போதோ அச்சிடும்போதோ சொற்றொடரில் விளக்கம், எடுத்துக்காட்டு முதலியவை தரப்படுவதற்கு முன் பயன்படுத்தும் குறி;colon.

முக்காலி பெ. (n.) மூன்று கால்கள் கொண்ட சிறிய இருக்கை; stool with three legs.

முக்காலும் பெ. (n.) பெரும்பாலும்; முழுவதும்; முற்றிலும்; mostly. நீ சொல்வது முக்காலும் சரி.

முக்காலே மூன்று வீசம் பெ. (n.) கிட்டத் தட்ட முழுவதும்; mostly. அவன் சொல்வதில் முக்காலே மூன்று வீசம் பொய்.

முக்கிமுனகி வி.அ. (adv.) மிகவும் முயற்சித்து; with much great difficulty, groaning. முக்கி முனகி எப்படியோ வீட்டுக்கான முன்பணத்தைக் கொடுத்துவிட்டேன்'.

முகத்தில் விழித்தல்

389

முக்கியத்துவம் பெ. (n.) சிறப்பு நிறைந்த தன்மை ; importance.

முக்குதல் வி. (v.) 1. ஒன்றைச் செய்வதற்கு மிகவும் போராடுதல்; struggle. 2.மூச்சைப் பிடித்துக்கொண்டு அதிக அளவில் ஆற்றலை செலுத்துதல்; strain (in order to do something) groan. முக்கு பெ. (n.) சாலை, தெரு முதலிய வற்றின் முனை; comer (of a street, etc.). தெரு முக்கில் என்ன கூட்டம்?. முக்குளித்தல் வி. (v) நீரில் மூழ்குதல்; dive,

drown.

முகடு பெ. (n.) 1. மலை உச்சி; top of a mountain. மலைமுகட்டில் தவழும் வெண் மேகங்கள்'. 2. கூரையின் உச்சிப்பகுதி; ridge of a ceiling. 'விடை சொல்லாமல் முகட்டைப் பார்த்தால் என்ன பொருள்'. 3. நெற்றியின் புடைத்த மேல்பகுதி; upperpart of the

forehead.

முகத்தல் வி. (v.) கையால் அல்லது கொள்கலனால் நிறையுமளவு எடுத்தல்; take (mater, grain,etc., with one's hands or a container). பானையிலிருந்து முகந்து ஒரு செம்புத் தண்ணீர் குடித்தேன்'.

முகத்திரை பெ. (n.) முகத்தை மறைக்கும் வகையில் போட்டுக்கொள்ளும் மெல்லிய உறை; veil.

முகத்தில் அடித்தாற்போல் வி.அ. (adv.) பேசும்போது நயமாகச் சொல்லாமல் அப்பட்டமாகவும் கடுமையாகவும்; bluntly.

முகத்தில் விட்டெறிதல் வி. (v.) எரிச்ச லோடு கூறும்போது தருதல்; fling something at someone.

முகத்தில் விழித்தல் வி. (v.) I. ஒருவரின்

உருவத்தை அல்லது முகத்தைக்