பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394

முடிசூட்டுவிழா

இருப்பதற்கானவாய்ப்பைப்பற்றிப் பேசுதல்; fancy amariage between two people, imagine an affair.

முடிசூட்டுவிழா பெ. (n.) மன்னராட்சியில் ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு அடையாளமாக அவருக்கு மணிமுடி சூட்டும் நிகழ்ச்சி; coronation. முடிசூடுதல் வி. (n.) அரசாட்சியை ஏற்றல்; crown. 'தந்தைக்குப் பின் மகன் அரசனாக முடிசூடுவதே மரபாக இருந்திருக்கிறது.

முடிதிருத்தகம் பெ. (n.) முடியைக் குறைத்து அல்லது திருத்தி அழகு படுத்தும் கடை; hair dressing salon. முடிதிருத்துதல் வி. (v.) முடியைக் குறைத்து அல்லது திருத்தி அழகு படுத்துதல்; cut or trim the hair.

முடிதிருத்துநர் பெ. (n.) முடிதிருத்துதல், முகமழிப்பு செய்துவிடுதல் போன்ற வற்றைத் தொழில்முறையாகச் செய்பவர்; barber.

முடிப்பு பெ. (n.) பணம், நகை முதலிய வற்றைத் தொகுத்துத்துணி போன்ற வற்றில்கட்டி வைத்திருப்பது; (money, articles of jewellery) wrapped (in a cloth) or tied up.

முடிமயிர் பெ.(n.) பெண்கள் முடியோடு சேர்த்துப் பின்னிக்கொள்ளும் பொய்முடி; false hair. முடிமயிர் வைத்து முடிந்ததனால் கொண்டை இவ்வளவு பெரிதாக இருக்கிறது'. முடியிறக்குதல் வி. (v.) வேண்டுதல் கரணியமாக கோயிலில் தலை முடியை மழிக்கும் சடங்கை நிறை வேற்றுதல்; have one's head shaved or tonsured in fulfilment of a wow. *குழந்தைக்கு முடியிறக்கிக் காது குத்த வேண்டும்.

முடியைப் பிய்த்துக்கொள்ளுதல் வி. (v.) ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண முடியாமல் துன்பப்படுதல்; rack one's brains (to solve a problem); be driven mad.

முடிவு பெ. (n.) I. ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடையும் நிலை; இறுதி; கடைசி; end (of something). 'இவன் அட்டூழியத்துக்கு ஒரு முடிவு வராதா?'. 2. வெற்றி தோல்விகளைப் பற்றி இறுதியாகக் கொடுக்கப்படும் செய்தி; result (of a competition examination). 3. ஆராய்ச்சி, உசாவல் போன்றவை இறுதியாக வெளியிடும் செய்தி; result (of an investigation, test, etc.,). 4. தீர்மானம்; decision. 5.தீர்ப்பு; verdict.

முடிவு கட்டுதல் வி. (v.) 1. ஒன்றைக் குறித்துத் தீர்மானமான முடிவை எடுத்தல்; decide. 2. ஒரு செயலை மேலும் தொடர முடியாத நிலையை அடையச் செய்தல்; put an end to something.

முடிவெட்டுதல் வி. (v.) தலைமுடியைக் கத்தரித்துச் சீர் செய்தல்; have or give a hair cut.

முடுக்கம் பெ. (n.) குறிப்பிட்ட விசையில் குறிப்பிட்ட திசையில் சென்று கொண் டிருக்கும் ஒரு பொருளின் விசையில் ஏற்படும் மாற்றம்; acceleration. முடுக்கிவிடுதல் வி. (v.) திறமையாக அல்லது விரைவாகச் செயல்படும்படி தூண்டுதல்; step up; accelerate. முடுக்குதல் வி. (v.) I. பொம்மை, பொறி போன்றவை இயக்கு வதற்காக விசை, திறவுகோல் போன்றவற்றைத் திருகுதல்; set in motion; wind. 2. திருகாணி முதலியவற்றை உட்செலுத்துதல்; screw (something). 3. வண்டியில் பூட்டியிருக்கும் மாடு, குதிரை போன்றவற்றை விரைத் தோட்டுதல்; goad. மாட்டை முடுக்கி விட்டதும் விரைவு அதிகரித்தது'.