பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடுக்கு பெ. (n.) I. அகலக் குறைவான சந்து; lane. 2. மூலை; (street) comer. தெரு முடுக்கில் ஒரு பெட்டிக்கடை'

முடுக்குத் தெரு பெ. (n.) வளைந்து வளைந்து செல்லும், அகலம் குறைந்த தெரு; winding, narrow lane.

முடைதல் வி. (v.) பாய், கூடை முதலி யவை பின்னுதல்; plait (a basket); (weave a mat). எங்கள் பள்ளியில் பாய்முடையக் கற்றுக் கொடுக்கி றார்கள்.

முடை பெ. (n.) பணம், பொருள் போன்றவற்றுக்குத் தட்டுப்பாடு; lack shortage. 'விதை நெல்லுக்கு இப் போது சற்று முடை'.

முடைநாற்றம் பெ.(n.) ஒருவகை அழுகல் நாற்றம்; foul smell (ofrotten meat, sour milk, etc.,).

முண்டக்கட்டை பெ. (n.) அம்மணம்; nakedness.

முண்டம் பெ. (n.) 1. தலையில்லாத மாந்த உடல்; headless (human) body, trunk. 2. அம்மண உடல்; naked body. முண்டியடித்தல் வி. (v.) கூட்டத்தில் முன்னே போக ஒருவரையொருவர் நெருக்கித்தள்ளுதல்; Jostle against, push around.

முண்டுதல் வி. (v.) முட்டுதல், நெருக்குதல் போன்ற செயல்களைச் செய்தல்; jostle.

முண்டு பெ. (n.) 1. முடிச்சுப் போன்றது; knot. 2. வேட்டி; unstitched piece of

cloth for men worn from waist to ankle (in India) dhoti. முண்டுகொடுத்தல் வி. (v.) முட்டுக் கொடுத்தல்; give a support or prop. முணுக்கென்றால் வி.அ. (adv.) எடுத்ததற் கெல்லாம்; at the slightest provocation. முணுமுணுத்தல் வி. (v.) I. வெறுப்பு, மனக்குறை முதலியவற்றை வெளிப் படுத்தும் வகையில் தாழ்ந்த குரலில்

முத்துச்சரம்

395

தனக்குத் தானே பேசிக்கொள்ளுதல்; தாழ்த்த குரலில் ஒருவரிடம் கமுக்கமாகப் பேசுதல்; mutter, talk in whispers. 2. வெளிப்படையாக இல்லாமல் தனது மனக்குறையை அல்லது திறனாய்வை ஒருவர் வெளிப் படுத்துதல்; grumbling secretly. 3. வாய்க்குள்ளாக உச்சரித்தல் அல்லது பாடுதல்; mumble (mantras, prayers softly).

முணுமுணுப்பு பெ. (n.) வெறுப்பு, மனக்குறை முதலியவற்றை வெளிப் படுத்தும்வகையில் முணுமுணுக்கும் செயல்; grumbling.

முத்தடுப்பு ஊசி பெ. (n.) தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், தசை விறைப்பு தளிர்நோய் ஆகிய மூன்று நோய்களுக்குமான தடுப்பு மருந்து; triple antigen.

முத்தமிடுதல் வி. (V) முத்தம் கொடுத்தல்; kiss. மகனை நெற்றியில் முத்தமிட்டு

வழியனுப்பினான்',

முத்தாய்ப்பு பெ. (n.) பேச்சு, படைப்பு அல்லது ஒரு நிகழ்ச்சியின் சிறப்பான முடிவு; effective or precise end. முத்தாரம் பெ. (n.) முத்துமாலை; pearl garland.

முத்திரைகுத்துதல் வி. (v.) ஒன்றின் மீது அல்லது ஒருவர் மீது குறிப்பிட்ட அடையாளத்தை இடுதல்; label. முத்திரை பதிதல் வி. (v.) தன்னுடைய தனித்தன்மையை விளங்கச் செய்தல் அல்லது நிலைநாட்டுதல்; make amark. முத்து பெ. (n.) நித்திலம்; pearl. முத்துக்குளித்தல் வி. (v.) கடலில் ஆழத்திற்குச் சென்று முத்துக்களைச் சேகரித்தல்; dive for pearl oysters. முத்துச்சரம் பெ.(n.) முத்துத் தொங்கல்; string of pearls.