பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396

முத்துமாலை

முத்துமாலை பெ. (n.) முத்தாரம் பார்க்க. முத்துமுத்தாக வி.அ. (adv.) 1. வியர்வைத் துளிகள், பனித்துளிகள் போன்ற வற்றைக் குறிக்கும்போது ஒரு பரப்பின் மேல் திவலைதிவலையாக; as droplets. 'அவருக்கு முகமெல்லாம் முத்து முத்தாக வியர்த்திருந்தது'. 2.கையெழுத்தைக் குறித்து வரும் போது தெளிவாகவும் அழகாகவும்; (of handwriting) legibly and beautifully. என் தம்பி முத்து முத்தாக எழுது

வான்.

முத்துமுத்தான பெ.அ. (adj.) 1. கை யெழுத்தைக் குறித்து வரும் போது தெளிவாகவும் அழகாகவும் இருக் கிற; (of handwriting) legible and beautiful. 2. சிறப்பான, அருமையான;

excellent, rare.

முத்துவிழா பெ. (n.) ஒருவரின் அல்லது ஒரு அமைப்பின் எண்பதாம் ஆண்டின் நிறைவை ஒட்டிக் கொண் டாடப்படும் விழா; celebration marking the completion of 80th year. முதல் ஆட்டம் பெ. (n.) திரையரங்கில் ஆறுமணி அளவில் காட்டப்படும் காட்சி; (in India) first show of the day in a cinema, commencing at 6 in the evening.

முதல் தகவல் அறிக்கை பெ. (n.) ஒரு குற்ற நிகழ்ச்சியைப் பற்றிய விளக்கங் களைக் காவல்துறையினருக்குத்

தெரியப்படுத்தியதின் அடிப்படை யில் உசாவுகைக்கு முன்பு காவல் துறையினர் பதிவு செய்யும் அறிக்கை; (in India) information of an offence first received and recorded by the police (abbreviated to F.I.R.).

முதல் நூல் பெ. (n.) ஒரு நூலுக்கு மூலமாக அமைந்த வேறு ஒரு நூல்;a work that is the basis of other works

source.

முதல் மரியாதை பெ. (n.) கோயில் திருவிழா போன்றவை தொடங்கும் போது ஊரில் முகாமையானவராகக் கருதப்படுபவருக்கு அளிக்கப்படும் மதிப்பு; symbolic show ofrespect to one considered the most important person in the local community at the beginning of a temple function.

முதலாளி பெ. (n.) ஆட்களை வேலைக்கு அமர்த்திச் சொந்தத் தொழிலோ வணிகமோ செய்பவர், ஊர்தி, நிலம் போன்றவற்றின் உரிமையாளர்; one who invests in and runs a business, industry, etc., proprietor, owner.

முதலாளித்துவம் பெ. (n.) ஒரு நாட்டின் உற்பத்திக் கருவிகள் பெருமளவில் தனியார் உடைமையாக இருக்கும் பொருளாதார அமைப்பு; capitalism.

முதலாளியம் பெ. (n.) முதலாளித்துவம்

பார்க்க.

முதலீட்டாளர் பெ. (n) ஒரு தொழில்,

நிறுவனம், பங்குச் சந்தை போன்ற வற்றில் பணத்தை முதலீடு செய்பவர்;

investor.

முதலீடு பெ. (n.) வருவாய் ஈட்டுவதற் காகத் தொழில், வணிகம் முதலிய வற்றில் தொடக்க நிலையிலும் வைப்பகம் போன்றவற்றில் சேமிப் பாகவும் போடப்படும் பணம்; மூலதனம்; capital, investment. முதலுதவி பெ. (n.) நேர்ச்சிக்குள்ளான வருக்கு அல்லது திடீரென்று உடல் நலம் குன்றியவருக்கு அளிக்கப்படும் உடனடி மருத்துவம்; first aid. முதலைக் கண்ணீர் பெ. (n.) இரக்கத்திற்கு உரிய செய்தியில் காட்டும் போலியானவருத்தம்; crocodile tears. முதன்முதலாக வி.அ. (adv.) முதல் முறையாக; முதல் தடவையாக; for the first time.

முதன்மை பெ. (n.) இருப்பவற்றில்

முதலிடம் வகிக்கக்கூடியதாகவும்