பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398

முந்துதல்

முந்துதல் வி. (v.) 1. தனக்கு முன்னால் சென்று கொண்டிருக்கும் ஒன்றை அல்லது ஒருவரைக் கடந்து செல்லுதல்; கடந்து முன் செல்லுதல்; go past, overtake. 2. ஒன்றைப் பெறவோ செய்யவோ பிறரைக் காட்டிலும் விரைதல்; overtake, rush. 3.வெற்றிப்பேறு, சிறப்பு போன்ற வற்றில் ஒருவரை மிஞ்சுதல்; surpass. முந்தைய பெ.அ. (adj.) காலத்தால்

முற்பட்ட, முன் இருந்த அல்லது நிகழ்ந்த; previous, pre.

முந்தையநாள் பெ. (n.) நேற்று என்ற நாளுக்கு முந்திய நாள்; day before yesterday.

முப்பரிமாணம் பெ. (n.) நீளம், அகலம், உயரம் ஆகிய மூன்று அளவுகள்; the three dimensions. 'இது கட்டடத்தின் முப்பரிமாணப் படம்'.

முப்பரிமாண வில்லை பெ. (n.) முப்

பரிமாணத்தில் தோற்றம் அளிக்கும் வகையில் ஊடொளி (லேசர்) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கும் எளிதாக நகல் செய்ய முடியாத, வில்லை வடிவிலான படம்; hologram.

முப்பாட்டன் பெ. (n.) தாத்தாவின் தந்தை அல்லது தாத்தாவின் தாத்தா; great grand father or grand father's grand father. இது எங்கள் முப்பாட்டன் காலத்து வீடு'.

மும்முரம் பெ.(n.) செயற்பாட்டில் கவனத்துடன் கூடிய விரைவு; intensity. முயங்குதல் வி. (v.) புணர்தல்; copulate. முயல்தல் வி. (v.) ஊக்கத்தோடு; முயற்சி செய்தல்; try hard, strive. எல்லோருடைய ஆதரவையும் பெற முயல்வோம்.

முயற்சித்தல் வி. (v.) முயலுதல், முயற்சி செய்தல்; try.

முயற்சி பெ. (n.) 1. ஒன்றுக்காக மேற் கொள்ளும் உழைப்பும், செயற் பாடும்; effort. 2. முனைப்புடன் மேற்கொள்ளப்படும் செயல்; attempt. முரட்டுத்தனம் பெ. (n.) குணம், செயல் போன்றவற்றில் மிகவும் கடுமை; harshness.

முரடன் பெ. (n.) முரட்டுக் குணத்தவன்; a rough and tough male, ruffian.

முரடு பெ. (n.) 1. மிகக் கடுமையானவர்; rough person.2. உறுதியும் கடினத் தன்மையும் கொண்டது; roughness, coarseness. 3. பெரியதாக இருப்பது; large in size.

முரண் பெ. (n.) எதிரானதாகவோ மாறுபட்டதாகவோ அமைவது, முரண்பாடு; contradiction, variance. முரண்டுதல் வி. (v.) முரண்டு செய்தல், முரண்டு பிடித்தல்; give stiff resistance,

be obstinate.

முரண்டு பெ. (n.) பிறர்கூறுவனவற்றிற்கு எதிர்ப்புக் காட்டுவது; ஒட்டாரம்; stubbornness, obstinacy. 'வீட்டில் பையனுடைய முரண்டும் ரகளையும் அதிகமாகிவிட்டன்.

முரண்படுதல் வி. (v.) எதிர்நிலைப்பாடு, மாறுபடுதல்; be at variance with. 'நூலில் தெரிவித்திருக்கும் கருத்து களோடு முரண்படுகிறேன்'. முரண்டுபிடித்தல் வி. (v.) பிறர் கூறும் அல்லது எதிர்பார்க்கும் ஒன்றைச் செய்ய எதிர்ப்புக் காட்டுதல்; ஒட்டாரமாக இருத்தல்; be adamant. தீவனத்தைத் தின்னாமல் மாடு முரண்டுபிடிக்கிறது'.

முரண்பாடு பெ. (n.) ஒன்று அல்லது ஒருவருடன் மாறுபடும் நிலை; contradiction, difference.