பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முழக்குதல் வி. (v.) 1. இன்னியங் களாலோ (இசைக்கருவிகளாலோ ) வாயாலோ பேரொலி எழுப்புதல்; roar. 'தூரத்தில் பறைகளை முழக்கும் ஒலி கேட்டது'.2. முழக்கமிடுதல்; shout (slogans); thunder.

முழங்கால் பெ. (n.) தொடைக்குக் கீழே காலை மடக்கி நீட்டக்கூடிய, மூட்டு அமைத்திருக்கும் பகுதி; knee. முழங்காலில் சரியான அடி!

முழங்காலிடுதல் வி. (v.) மண்டியிடுதல்; kneel down.

முழங்குதல் வி. (v.) 1. உரக்கக் கூறுதல், மேடையில் ஆரவாரத்துடன் பேசுதல்; shout (slogans), speak boisterously. 2. இடி, தகரி போன்றவை அல்லது இன்னியங்கள் பேரொலி எழுப்புதல்; (of thunder, cannon, etc.,) roar, rumble (of an ensemble) sound loudly. GLOOT தாளம் முழங்க ஊர்வலம் நடை பெற்றது.

முழம் பெ. (n.) உள்ளங்கையை விரித்த நிலையில் நடுவிரலின் நுனியிலிருந்து முழங்கையின் முட்டிவரையிலான அளவு; the length from the elbow to the tip of the middle finger, cubit. 'நாலு முழம் மல்லிகைப் பூ கொடு'. முழம்போடுதல் வி. (v.) கை முழ அளவில் அளத்தல்; measure with muzham. முழவு பெ. (n.) முரசு; drum. முழித்தல் வி. (v.) I. உறக்கம், மயக்கம் ஆகியவற்றிலிருந்து

விடுபட்டு கண்களைத் திறத்தல்; wake up (from sleep), regain consciousness (as from fainting). சட்டென்று விழித்துக் கொண்டேன். 2. தூங்காமல் இருத் தல்; be awake. 'பயத்தில் இரவு முழுவதும் தூங்காமல் விழித்தவாறு இருந்தான்.

முழி பெ. (n.) I. கண்; eye. 2. பார்வை; look. திருட்டு முழி, ஆந்தை முழி'.

முழுகுதல்

399

முழிப்பு பெ.(n.) I. தூக்கம் நீங்கிய நிலை; state of being awake. 2. மயக்கம் நீங்கிய நிலை, சுய உணர்வுடன் இருக்கும் நிலை; conscious state. 3. எச்சரிக்கை உணர்வு; caution. 4. விழிப்புணர்ச்சி; awareness, vigilance.

முழு அடைப்பு பெ. (n.) எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கத்தோடு அனைத்து நிறுவனங்களும் மூடப் பட்டும் போக்குவரத்து நிறுத்தப் பட்டும் நடக்கும் போராட்டம்; (in India) bandh.

முழுக்கமுழுக்க வி.அ. (adv.) முழு அளவில், முழுமையாக, முழுவதும்; entirely.

முழுக்காட்டுதல் வி (v.) குளிக்கச் செய்தல்; bathe. 'குழந்தைக்கு எண்ணெய் தேய்த்து முழுக்காட்டினேன். முழுக்கு பெ. (n.) I. நீரில் தலை அமிழும் படி முங்கிக் குளித்தல்; bathing in a river, etc., 2. தொடர்பு, செயல் போன்ற வற்றுக்கு முழுக்குப்போடும் நிலை; bidding farewell to. முழுக்குப்போடுதல் வி (v) ஒருவருடன் இதுவரை கொண்டிருந்த தொடர்பு, ஈடுபாடு போன்றவற்றை மேற் கொண்டு தொடராமல் நிறுத்திக் கொள்ளுதல்; sever one's connection, bid farewell, leave once and for all. முழுக வார்தல் வி. (v.) தலையை நனைத்துக் குளிப்பாட்டுதல்; bath (including the head). 'பிள்ளைக்கு நேற்று முழுக வார்த்தேன்'. முழுகாமல் இருத்தல் வி. (v.) கருத்தரித்த நிலையில் இருத்தல்; be pregnant;

conceive.

முழுகுதல் வி. (v.) 1. நீர்ப்பரப்பின் உட் செல்லுதல்; மூழ்குதல்; go in; sink drown. 2. குளித்தல்; bathe. ஆற்றில் முழுகிவிட்டு வா' . 3. மீட்க முடியாத