பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400

முழுங்குதல்

நிலைக்கு உள்ளாதல்; (of an undertaking) be sunk; be past redeeming. வீடு கடனில் முழுகிவிட்டது'. முழுங்குதல் வி. (v.) I. உணவுப்பொருள், மருந்து முதலியவற்றை வாயின் வழியாகச் செல்லவிடுதல்; swallow, gulp down. 'உணவை நன்றாக மென்ற பிறகே விழுங்குதல் வேண்டும்'. 2. சொற்களைத் தெளிவாகவோ முழுமையாகவோ கேட்க முடியாத படி வெளிப்படுத்துதல்; suppress (what one to say); gulp down. சொற்களை விழுங்காமல் பாடு. முழுது பெ. (n.) முழுமை; entirely; totally. நான் முழுதாக

'அவனை

நம்பினேன்.

முழு நேரம் பெ. (n.) I. வேலை, படிப்பு போன்றவற்றில் அவற்றுக்கு உரிய முழுக்கால அளவு; full time. 2.அரசியல், கலை, இலக்கியம், தொண்டு போன்றவைத் தொடர் பாக வரும் போது வேறு ஒரு பணியில் இல்லாமல் குறிப்பிடப்படு வதையே தனது முகாமைப் பணியாகச் செய்யும் நிலை; full time. முழுப்பரீட்சை பெ. (n.) ஆண்டு இறுதித் தேர்வு; annual examination. முழுமனத்தோடு வி.அ. (adv.) தயக்கமோ மனக்குறையோ இல்லாமல் முழு விருப்பத்தோடு; whole heartedly. *இந்தத் திட்டத்தை முழு மனத்தோடு வரவேற்கிறோம்'.

முழுமனதாக வி.அ. (adv.) மனநிறைவாக; whole heartedly. 'இந்த வேலையில் முழு மனதாக ஈடுபட முடிய

வில்லை. முழுமனதான பெ.அ. (adj.) நிறைவான; whole hearted. 'முழு மனதான ஒத்துழைப்பு

முழுமூச்சு பெ. (n.) ஒருவர் தனது முழுத்திறமையையும், ஆற்றலையும் ஒரு செயலில் விரைவாக ஈடு படுத்தும் தன்மை; full vigour. முழுமை பெ. (n.) குறைபாடு, குறைவு, விடுபாடு முதலியவை இல்லாத நிலை அல்லது தன்மை, நிறைவு; completion, wholeness. 'நூல் முழுமை பெறவில்லை.

முழுவதும் பெ. (n.) எல்லாம், அனைத்தும்; all, entire, full. நேற்று முழுவதும் மின்சாரம் வரவில்லை.

முழுவீச்சில் வி.அ. (adv.) ஒரு செயலில் செய்யப்பட வேண்டியதைத் தீவிரை வாகவும்; infull swing.

முள் பெ. (n.) 1. மீனின் எலும்பு; bone (of fish). மீன் முள் தொண்டையில் சிக்கிக் கொண்டுவிட்டது. 2. தூண் டில் முனையில் இணைக்கப் படும் சிறிய கொக்கி; fish hook.

முள் கம்பி பெ. (n.) குத்தும் வகையில்

சிறுசிறு கம்பிகளை முறுக்கிப் பின்னி வேலி அமைக்கப் பயன்படும் நீண்ட கம்பி; barbed wire. 'முள்கம்பியில் ஒரு ஆடு சிக்கிக்கொண்டுவிட்டது'.

முள் கரண்டி பெ. (n.) முன் பகுதியில் கூரிய முனைகளை உடைய கருவி; fork.

முள்வாங்கி பெ. (n.) தைத்த முள்ளை

பிடித்து இழுப்பதற்கான இரண்டு கூரிய முனைகளை உடைய கருவி; pincers.

முள்வேலி பெ. (n.) முள் நிறைந்த கிளைகளால் அல்லது முள்கம்பியால் ஆன வேலி; fence made of thomy branches of trees, barbed wire fencing. முள்ளந்தண்டு பெ. (n.) முதுகெலும்பு; back bone, vertebral column. முள்ளந்தண்டுள்ள விலங்குகள். முளைகட்டுதல் வி. (v.) ஊற வைத்த விதையை மூடிவைத்து முளை