பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முளைக்கச் செய்தல்; sprout. 'இந்த நெல்லை மூட்டை கட்டித்

தொட்டியில் போட்டு முளை கட்டலாம்.

முளைப்பாரி பெ.(n.) முளைப்பாலிகை பார்க்க.

முளைப்பாலிகை பெ. (n.) I. திருமணம் போன்ற சடங்குகளில் வைக்கப்படும் முளைவிட்ட ஒன்பது தவசங்கள் நிறைந்த சிறு மட்பாண்டம்; pot containing nine kinds of sprouted cereals and millets (used in rituals). 2. முளைவிட்ட ஒன்பது தவசங்கள் நிறைந்த மட்பாண்டங்களை எடுத்துச் சென்று நீர்நிலைகளில் விடும் திருவிழா; the ritual of immersing pots containing seeds nine varieties of cereals

and millets in a river tank, etc.,

முளைப்பு பெ.(n.) விதை முளைத்தல்; (of plants, seeds) germination. முளைவிடுதல் வி. (v.) 1. விதையில் இருந்து முளை கிளம்புதல்; geminate put forth shoots. 'அவரைவிதை முளைவிட்டுள்ளது . 2. குறிப்பிட்ட

சூழலில் ஓர் எண்ணம், உணர்வு,

நிலை போன்றவை தோன்றுதல், உருவாதல்; begin to appear. முற்காலம் பெ. (n.) நிகழ்கிற காலத்துக்கு அல்லது குறிப்பிடப்படும் காலத்துக்கு முந்தைய காலம்; earlier times. 'முற்காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயில்.

முற்பகல் பெ. (n.) காலைப் பொழு துக்கும் தண்பகலுக்கும் இடைப்பட்ட காலம்; forenoon.

முற்பட்ட பெ.அ. (adj.) காலத்தில் முந்தைய; prior (in time) earlier, par. *சிலப் பதிகாரம் கம்பராமா யணத்துக்கு முற்பட்ட நூல் ஆகும். முற்பட்ட வகுப்பு பெ. (n.) கல்வியிலும் பொருளாதாரநிலையிலும் வளர்ச்சி அடைந்ததாகக் கருதப்படுவதும்,

முற்றுதல்

401

அரசின் இட ஒதுக்கீடுகளில் இடம் பெறாததுமான இனங்களைக் குறிப்பிடும் சொல்; the communities not included in the list of backward communities, scheduled castes, and tribes; (in India) other communities. முற்படுதல் வி. (v.) ஒரு செயலைச் செய்ய முயலுதல் அல்லது தொடங்குதல்; attempt or begin (to do something). முற்பிறப்பு பெ. (n.) முற்பிறவி பார்க்க. முற்பிறவி பெ. (n.) தற்போதைய பிறவிக்கு முந்தையதாகக் கருதப் படும் பிறவி; previous birth.

முற்போக்கு பெ. (n.) 1. முன்னேற்றத்

திற்குத் தேவையானமாற்றங்களைக் காத்தும் காலத்துக்கு ஒவ்வாத மரபான நடைமுறைகளை விலக்கி யும் செயற்படும் போக்கு; sth. conducive to progress. 2. இடதுசாரி சிந்தனை களைக் கொண்ட அல்லது அவற்றை காக்கும் போக்கு; leftist out look.

முற்றம் பெ. (n.) I.வீட்டின் முன் பகுதியில் வாசலை ஒட்டிய திறந்த வெளிப்பகுதி; open courtyard (inside the house). முற்றத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். 2. வீட்டைச் சுற்றியுள்ள நிலப் பகுதி; open space surrounding a house.

முற்றல் பெ. (n.) முதிர விளைந்தது; (of vegetables) over ripe.

முற்றிலும் வி.அ. (adv.) முழுமையான அளவில், முழுவதும்; entirely, fully, totally. 'நான் சொல்வது முற்றிலும் உண்மை.

முற்றுதல் வி. (v.) I. மிகையான வளர்ச்சியை அடைதல்; (of certain vegetables) become over ripe, (of coconut) become ripe. 2. நோய் குணப்படுத்த முடியாத நிலையை அடைதல்; (of illness) get to an advanced