பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402

முற்றுகை

state. 3. இருவருக்கும் சண்டை முற்றுதல்; (of issues problems, etc.,) get aggravated, reach a critical stage. முற்றுகை பெ. (n.) எதிரிகள் அல்லது குற்றவாளிகள் இருப்பதாக நம்பப் படும் ஓர் இடத்தைச்சுற்றிவளைக்கும் செயல்; siege.

முற்றுகையிடுதல் வி. (v.) I. போர்ப்படை ஓர் இடத்தைச்சுற்றி வளைத்தல்; siege. சேரனின் படைகள் தகடூரை முற்றுகையிட்டன.2. மக்கள் பெருமளவில் ஓரிடத்தில் கூடுதல்; gather (in large numbers). முற்றுப்புள்ளி பெ. (n.) I. பொருள் முழுமை பெற்ற தொடரின் இறுதியில் இடப்படும் குறி; (in punctuation) full stop. 2. ஒன்றிலிருந்து மேற்கொண்டு தொடராத நிலை; end. இந்தச் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'. முற்றுப்பெறுதல் வி. (v.) ஒரு நிகழ்வு, பணி, திட்டம் முதலியவை முடி வடைதல்; be completed, come to an end. 'வாக்காளர் பட்டியல் பணி இன்னும் முற்றுப் பெறவில்லை'. முறம் பெ. (n.) தவசங்களைப் புடைப் பதற்குப் பயன்படும் நுனிப் பகுதி சற்று அகலமாக இருக்கும்படி மெல்லிய மூங்கில் பிளாச்சுகளால் பின்னப்பட்ட தடித்த விளிம்புடைய கருவி ;

wide - mouthed winnowing pan. கடலையை முறத்தில் கொட்டி வை.

முறித்தல் வி. (v.) I. மரம், குச்சி, எலும்பு முதலியவை ஒடிந்து, துண்டாதல்; break, snap, fracture. 'புயலில் மரம் முறிந்து சாய்ந்தது'. 2. பேச்சு, உறவு போன்றவை மேற்கொண்டு தொடர முடியாத நிலையை அடைதல்; break down. 3. பால், பாகு போன்றவை தன்மை மாறிப் பதம் கெடுதல்;

change, be spoiled. 4. சளி, நச்சுப் போன்ற குறைபாடு நீங்குதல்; lose V iru 1 en ce 5. வெறி மயக்கம் தெளிதல்; become sober.

முறிபெ.(n.) மீனைத் துண்டாக வெட்டிய பகுதி, துண்டு; piece (of fish cut into pieces). நடு முறியைக் குழம்பு வை'. முறிகுளம் பெ. (n.) உடைப்புக்கு உள்ளான கரையை உடைய குளம்; tank with a broken bund.

முறியடித்தல் வி. (v.) 1. செயல் வெற்றி பெறுவதைத் தடுத்தல்; outmanoeuvre, break, crush.2. ஒருவரால் ஏற்கெனவே நிகழ்த்தப்பட்ட வெற்றியைப் பின் னுக்குத் தள்ளி முந்துதல்; break (an old record).

முறுக்கு பெ. (n.) 1. முறுக்கப்பட்ட நிலை; twisted state. மீசை முறுக்கு' . 2. உடல் வலிமைக்கு உரிய உறுதி; robustness (of body). 3. மிடுக்கு; (youthful) vitality. வாலிப முறுக்கில் பேசுகிறான்'. 2. நொறுக்குத் தீனியில் ஒருவகை;

snacks.

முறுக்குதல் வி. (v.) 1. மீசையின் முனையைத் திருகுதல், துணி முதலிய வற்றை சுருட்டித் திருகுதல்; wring (clothes) twist. மீசையை முறுக்கிக் கொண்டே பேசினார். 2. திருகாணி போன்றவற்றை திருகுதல்; turn (a screw so as to fix something in place). 3. தார் முதலியவற்றைத் திரித்துக் கயிறு தயாரித்தல்; make (rope, etc.,) by twisting, (fibres, etc.,).

முறுகல் பெ. (n.) தோசை போன்ற சில உணவுப் பொருள்களின் மொர மொரப்பான நிலை; crisp. 'அம்மா எனக்கு முறுகலாகத் தோசை சுட்டுப் போட்டாள்.

முறுகுதல் வி. (v.) தசை முறுக்கேறி வலிமையாகக் காணப்படுதல்; (of muscles) be taut. 'அவனுடைய கைகள் முறுகியிருந்தன.