பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

something under consideration; context. இடம் பொருள் ஏவல் பார்த்து நீ அவரிடம் பேசி யிருக்க வேண்டும்'. இடம் போடுதல் வி. (V) பேருந்து, தொடரி (ரயில்) போன்றவற்றில் துணி, பை முதலியவற்றை அடையாளமாக வைத்து உட்கார்வதற்கான இடத் தைப் பிடித்துக்கொள்ளுதல்; block a seat in a crowded bus, train, etc., by placing a piece of cloth, etc., on the seat. இடமாற்றம் பெ. (n.) மாற்றல்; transfer (of employees from one place to another). இடர் பெ.(n.) 1. இடையூறு; trauble, hurdle. 2. துன்பம்; suffering. இடர்ப்பாடு பெ. (n.) I. இடையூறுக்கு உள்ளான நிலை; trouble, obstacle. 2. துன்பத்துக்குன்னான நிலை; state of suffering. இடறுதல் வி. (v.) 1. கால் தடுக்குதல்; to stumble, strike one's foot against. 2. துன்பப்படுதல்; to be afflicted, troubled. இடிச்சொல் பெ. (n) இடித்துரைக்கும் கடுஞ்சொல்; sharp reproof. இடித்தல் வி. (v.) I. முழங்குதல்; to sound loud; to make a noise, as a gun to roar as lion. 2. இடியொலிபடுதல்; to thunder. 3. நோதல்; to throb, to beat, to ache as the head. 4. தாக்கப்படுதல்; to come in contact with hit against. 5. மோதுதல்; to strike against as a ship against the shore. 6. சினத்தல் ; to be angry, furious. 7. தூளாக்குதல்; to pound in a mortar, to bray with a pestle; to reduce flour. & தகர்த்தல்; to beat so as to break, to batter to pieces, demolish, shatter. 'வீட்டையிடித்துத் தள்ளினான்'. 9. நசுக்குதல்; to press, to crush as sugarcane. 10. தாக்குதல்; to push or thrust side -wise as with the elbow. II. முட்டுதல் ; to attack with homs, as a bull. 12. இடியிடித்தல்; to thunder. இடிபாடு 33 இடித்துக்காட்டுதல் வி. (v.) குத்திக் காட்டுதல்; draw attention to someone's lapses, weakness, etc., in a mean or malicious war, jibe. இடித்துரைத்தல் வி. (v.) அறிவுரை கூறித் திருத்தும் நோக்கத்தோடு கண் டித்தல்; rebuke (some one with the intention of corecting etc.,). இடிதல் வி. (v.) 1. தகர்தல்; to break, crumble,to be in ruins as a wall; to full to piece. 2. கரையழிதல்; to be washed away, to become eroded, as the bank of a river. 3. முளை முறிதல்; to become bruise, to be broken, as the grain of rice. அரிசி இடிந்து போயிற்று'. 4. வருத் துதல்; f. 5. மலைத்தல்; to be stunned, staggered, 'அவள் துக்க செய்தி கேட்டு இடித்து போனாள். 6. முறிதல் ; to break in two, part in two. இடிதாங்கி பெ. (n.) கட்டடத்தின் மீது இடிவிழாதபடிகாக்க வைக்குங் கம்பி அமைப்பு: lightning conductor or rod, இடிந்துபோதல் வி. (v.) 2. அரிசி மற்றும் தவசம் போன்றவை உமி நீக்கப்படும் பொழுதும், தீட்டும் பொழுதும் உரு அழிந்து உடைந்து போதல்; when removing the husks and polishing the rice and grain be broken. 2. எதிர்பாராமல் வரும் துன்பச் செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோதல்; shocked and frozen by hearing the unexpected sad news. இடிபடுதல் வி. (v.) 1. தாக்கப்படுதல்; to be amsaulted, elbowed. 2. நொறுங்குதல்; to be comminuted as rice. 3. வெடி படுதல்; to crackle as fire. 4. துன்பப் படுதல்; to be vexed or harried. இடிபாடு பெ. (n.) ஊர்தி, கட்டடம் போன்றவை தகர்ந்து விழுந்த நிலை; சிதைவு; debris, wreckage. 'கட்டடத்தின் இடிபாடுகளுக்