பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410

மூடத்தனம்

மூடத்தனம் பெ.அ. (adj.) முட்டாள்தனம், மடத்தனம்; foolishness. 'பணம்தான் வாழ்க்கை என்று நினைப்பது மூடத் தனம்.

மூடநம்பிக்கை பெ. (n.) பகுத்தறிவுக்கு

ஒவ்வாத நம்பிக்கை; superstitious belief.

மூடன் பெ. (n.) அறிவில்லாதவன், முட்டாள்; stupidman.

மூடாக்கு பெ. (n.) I. முக்காடு; cloth covering the head. 'திண்ணையில் மூடாக்குப் போட்டுக்கொண்டு தூங்குவது யார்?'. 2. மூடப்பட்ட

போன்றவற்றின் வாய்ப்பகுதி, முன்பகுதி அல்லது மேல் பகுதியை அடைத்தல்; (of a case box, etc.,) be in a closed condition, close (a case, box, etc.,). நான் பார்த்தபோது பெட்டி மூடித்தான் இருந்தது'.

மூடுபனி பெ. (n.) தெளிவாகப் பார்க்க முடியாதபடி அடர்த்தியாகக்காற்றில் நிறைந்திருக்கும் பனி; fog. 'மூடுபனி காரணமாகப் பாதை தெரியாததால் வண்டிகள் மெதுவாகச் சென்றன. மூடுபெட்டி பெ. (n.) பனையோலையால் பின்னப்பட்ட மூடியுள்ள சிறிய பெட்டி போன்ற கூடை; box like basket with a lid made of dried palmyra leaf.

அல்லது மூடியிருக்கும் நிலை; the மூடு மந்திரம் பெ. (n.) ஒன்று வெளிப்

state of being closed or blocked.

மூடாக்கு முறை பெ. (n.) மண்ணி

லிருக்கும் ஈரப்பதத்தைத் தக்கவைப்

படையாக இல்லாமல் கமுக்கமாக (ரகசியமாக) இருக்கும் நிலை; veiled activity, secrecy.

பதற்காகப் பயிரைச் சுற்றியுள்ள மூத்தவர் பெ. (n.) அகவையானவர்; senior

மண்ணை இலை, தழை, வைக்கோல் போன்றவற்றால் மூடும் முறை; mulching.

மூடி பெ. (n.) எழுதுகோல் போன்ற வற்றில் மேல் பகுதியைப் பாதுகாக்கச் செருகி மூடும் அமைப்பு; cap (of a pen, etc.,). தூவலின் மூடியைக் கழற்றி வைத்துவிட்டு எழுதத் தொடங் கினான்.

மூடி மறைத்தல் வி. (v.) நடந்து விட்டதைப் பிறர் அறிந்துவிடாத வாறு செய்தல்; cover up. 'எவ்வளவு மூடி மறைத்தாலும் உண்மை ஒரு நாள் தெரியாமலா போகும்?'. மூடுதல் வி. (v.) I. திறந்திருக்கும் கதவு, சாளரம் முதலியவற்றை உள்ளே அல்லது வெளியே பார்க்க முடியாத அல்லது ஏதும் செல்ல முடியாத நிலைக்கு நகர்த்துதல்; (of door, etc.,) close (shut a door, etc.,). 'இந்தப் பொத்தானை அமுக்கினால் கதவு மூடும்'. 2. பெட்டி, பை, ஏனம்

(one's) elder. 'மூத்தவர்களை மதித்து நடப்பது நல்லது அல்லவா?.

மூத்தாள் பெ. (n.) முதல் மனைவி; first wifc. மூத்தாளின் பிள்ளைகளை இளையாள் அன்புடன் நடத்தியது அவருக்கு ஆறுதலாக இருந்தது'. மூத்தோர் பெ. (n.) அகவை முதிர்ந்த வர்கள்; the elderly. 'மூத்தோரிடம் பணிவாக நடந்துகொள்பவன்நான். மூதாட்டி பெ. (n.) அகவை முதிர்ந்த

பெண்; old woman. 'எண்பது வயது மதிக்கத் தக்க மூதாட்டி.

மூதேவி பெ. (n.) I.போகூழ் (துரதிர்ஷ் டத்தை) விளைவிப்பதாகக் கருதப் படும் பெண் தெய்வம்; female deity who is believed to cause misfortune. 2. ஒருவரைத் திட்டுவதற்குப் பயன் படுத்தும் சொல்; atem of abuse. அந்த மூதேவி வந்துவிட்டானா?

மூர்ச்சித்தல் வி. (v.) நினைவிழத்தல் அல்லது மயக்கமடைதல்; faint.