பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிர்ச்சியால் மூர்ச்சித்துக் கீழே விழுந்தாள்.

மூர்ச்சை பெ.(n.) நினைவிழப்பு; fainting. வெயில் தாளாமல்

மூர்ச்சையாகிவிட்டார்.

கிழவர்

மூலகர்த்தா பெ. (n.) ஒரு செயல், நிகழ்வு போன்றவற்றுக்கு மூலகாரணமாக இருப்பவர்; person responsible (for an event).

மூலதனம் பெ. (n.) தொழில் துவங்கத் தேவைப்படும் அல்லது பயன்படுத் தப்படும் பணம்; capital, investment. மூலப்பொருள் பெ. (n.) ஒரு பொருள் தயாரிப்பதற்குத் தேவையான தனித் தனியான அடிப்படைப் பொருள்; raw material.

மூலம் பெ. (n.) I. மலவாய் ஓரத்திலோ உட்பகுதியிலோ ஏற்படும் மிகுந்த வலியை உண்டாக்கும் சிறு புடைப் புகள்; haemonhoids, piles. 2. ஒன்று தோன்றுவதற்கு அடிப்படை மூலம்; source, origin.

மூலவர் பெ. (n.) கோயிலில் மறை நெறிகளின்படி திருநிலை நிறுவல் செய்யப்பட்ட முதற்றெய்வம்; principal deity in a temple.

மூலிகை பெ. (n.) மருந்தாகப் பயன்படும் இலை, வேர், போன்ற பகுதி; medicinal plant or herb. '951 பதினைந்து வகையான மூலிகை களைக் கொண்டு உருவாக்கப்பட்ட மருந்து'

மூலை பெ. (n.) 1. இரு பக்கங்களோ கோடுகளோ சந்திக்கும் கோணத்தில் அமைத்திருக்கும் பரப்பு அல்லது இடம், முனை; comer (where two sides or lines meet). 'சதுரத்துக்கு நான்கு மூலைகள்'. 2. ஒருவருடைய தேவையோடு ஒப்பிடும்போது இருப்பது மிகவும் குறைவு; too insignificant (in comparison with someone), nowhere near enough.

மூளைக்காய்ச்சல்

411

மூலை மட்டம் பெ. (n.) கட்டடத்தின் மூலை செங்கோணத்தில் இருக் கிறதா என்பதைக் கண்டறியப் பயன்படும் 'ட' வடிவில் இரண்டு தகடுகள் பொருத்தப்பட்ட கருவி; mason's set square.

மூலைமுடுக்கு பெ. (n.) 1.வீடு, கட்டடம் போன்றவற்றில் உள்ள சிறுசிறு இடைவெளி அல்லது இடுக்கு; small gaps (between things). 2. ஓர்ஊர், நாடு போன்ற வற்றில் எளிதில் சென்றடைய முடியாத இடம்; (unreachable) comer (of a country, etc.,) every nook and cranny. மூலைவிட்டம் பெ. (n.) சதுரம், செவ்வகம் போன்றவற்றில் நேரெதிர் மூலைக்கு இடையில் செல்வதும் மேற்குறிப் பிட்ட வடிவங்களைச்சமமாகப் பிரிப் பதுமான கோடு அல்லது அந்தக் கோட்டின் நீளம் ; diagonal.

மூழ்குதல் வி. (v.) 1. நீரின் மேற்பரப்பி லிருந்து கீழே செல்லுதல்; முழுகுதல்; submerge, be drowned, sink. 'பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன'. 2. உணர்ச்சி, நினைவு, வேலை முதலியவற்றில் ஒருவர் தன்னையே உட்படுத்திக் கொள்ளுதல் அல்லது ஆழ்தல், அமிழ்தல்; be buried (in thought, etc.,), be immersed (in grief, etc.,).

மூள்தல் வி. (v.) 1. தீ பற்றுதல்; (of fire) catch, break out. 2. உறழ்வுரையாடல், கலவரம் போன்றவை ஏற்படுதல்; (of dispute, war, etc.,) break out. மூளி பெ. (n.) பெண்கள் நகை, செஞ்சாந்து முதலியவை இல்லாமல் வெறுமையாகத் தோற்றமளிக்கும் நிலை; (of women) bareness (i.e. without wearing ornaments and other auspicious signs such as kungumam). மூளைக்காய்ச்சல் பெ. (n.) அழற்சியினால் மூளையில் உண்டாகும் காய்ச்சல் கூடிய நோய்; brain fever.