பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலத்தடை பெ. (n.) சட்டத்தின் செயல்பாட்டையோ கீழ்நீதிமன் றத்தின் உத்தரவையோ மேல் முறையீடு முடியும் வரை நிறுத்தி வைக்கும்படி மேல்நயன்மன்றம் பிறப்பிக்கும் தடை உத்தரவு; interim stay. இடைக்காலம் பெ. (n.) 1. முடிவானத் தீர்வு காண்பதற்கு முன் உள்ள நிலை; interim. 2. அரசியல், இலக்கிய வரலாற்றில் பண்டைக் காலத்துக்கும், இக்காலத்துக்கும் இடைப்பட்ட காலம்; period between the ancient and the modem. இடைக்கிடை வி.அ. (adv.) I.இடை யிடையே, தடுநடுவே; in between (an action, event) every now and then. 2. அவ்வப்போது; from time to time; periodically. இடைச்செருகல் பெ. (n.) மூலச் செய்யுளிற் பிறரால் சேர்க்கப்பட்ட பகுதி; interpolation. இடைஞ்சல் பெ. (n.) I. தெருக்கம்; narrowness, closeness. 'இடைஞ்சல் வழி 2. தடை; obstruction, hindrance. 3. தொல்லை; trouble, distress. இடைத்தரகர் பெ. (n.) I. பெரும்பாலும் வணிக ஒப்பந்தம் போன்ற பெரும் பேரத்தை முடித்து வைக்கும் ஆள்; middle man. 2. அரசுத் திட்டங்களின் பயன்பயனாளிகளுக்கும், விற்பனை யின் பயன் உருவாக்குநர்களுக்கும் முழுமையாகச் செல்லவிடாமல் ஊதியம் தேடிக்கொள்ளும் ஆள்; middle man. இடைத்தரம் பெ. (n.) நடுத்தரம்; medium quality, intermediate grade, neither bignor small. இடைத்தலைவலி பெ. (n.) விட்டு விட்டு வரும் தலைநோய்; headache usually occuring at intervals - intermittent headache. இடைமறித்தல் இடைத்தேர்தல் பெ. 35 (n.) ஒரு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட உறுப்பினர் பதவி விலகி னாலோ, இறப்பு அடைந்தாலோ அந்தத் தொகுதியில் மீண்டும் நடத்தப்படும் தேர்தல் சட்ட அவை பாராளுமன்றத்துக்கோ வரையறுக்கப்பட்ட காலத்துக்கு முன் நடத்தப்படும் பொது வாக்கெடுப்பு; by election election conducted before the end of the term. இடைநீக்கம் பெ. (n.) I. சம்பளம் பெறும் பணியாளரை அவரது பணியொழுங் கின்மைக்காகப் பணியிலிருந்து விலக்கிவைத்தல்; to suspend from any privilage, office, emolument, etc., for a time. 2. கட்சிக்கட்டுப் பாட்டை மீறும் தொண்டரைக் கட்சியிலிருந்து இடைக்காலமாக நீக்குகை; to put or hold in a state of suspense or suspension. 3. குறுங்காலமாக நிறுத்திவைத்தல்; to stop for a time. இடைநேரம் பெ. (n.) 1. சிற்றுண்டி கொள்ளுஞ் சமயம்; recess, tiffin time, interval. 2. நடுப்பகல்; noon. 3. இரண்டு காலப் பகுதிகளுக்கு இடைப்பட்ட நேரம்; interval between two periods of time. இடைப்புழுதி பெ. (n.) விதைப்பாட்டு நிலம், புழுதி நிலம்; land which is neither very moist nor very dry which is suitable for sowing. இடைப்பேச்சு பெ. (n.) நடுநடுவே சொல்லும் சொல்; interject. இடைபோகம் பெ. (n.) 1. இடைக்காலத்து விளைவு; interim crop. 2. இடையில் புன்செய்ப் பயிர் விளைவு; dry crop between two spells of wet caltivation. இடைமறித்தல் வி. (v.) I. பேச்சு மற்றும் செயலில் குறுக்கிடுதல்; interrupt.