பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 இடையறாத 2. வழிமறித்தல்; block the way of someone; intercept. இடையறாத பெ.அ. (adj.) இடைவிடாத ; தொடர்ச்சியான; uninterrupted; without break; incessant. இடையிடையே வி.அ. (adj.) ஒரு செயலின் அல்லது நிகழ்ச்சியின் நடுநடுவே! ஒரு காலத் தொடர்ச்சியில் அவ்வப் போது; in between an action event / every now and then. 'சாப்பிடும்போது இடையிடையே தண்ணீர் குடிக் காதே'. இடையூறு பெ. (n.) இடைஞ்சல், தடை; impediment, obstruction, hindrance. இடைவிடல் பெ. (n.) விட்டுவிட்டுத் தொடங்கல்; off and on intermittent activity, irregular functioning. இடைவிடாமல் கு.வி.எ. (adv.) I.எப் போதும்; always, incessantly, constantly. 2. தொடர்ந்து; continually. இடைவெட்டு வி. (v.) பேச்சில் குறுக் கிடுதல்; interfere while someone is speaking. 'நான் பேசிக் கொண் டிருக்கும்போது இடைவெட்டி பேசாதே. இடைவெளி பெ.(n.) I. வெளிப்பரப்பு; gap, intervening space. 2. பிளப்பு; hole as in a wall, cleft. இடைவேளை பெ. (n.) திரைப்படம், விளையாட்டு, அலுவலகம், முதலிய வற்றில் உணவு, தேநீர் முதலியன அருந்தத் தரப்படும் குறுகிய ஓய்வு வேளை; interval in a show, short break for lunch, tea, etc., இண்டிடுக்கு பெ. (n.) மிகச் சிறந்த இடைவெளி அல்லது துளை; cleft nook, minute cavity. 'இண்டும் இடுக்குமாய். இணக்கம் பெ. (n.) 1. இசைப்பு; fitting well together as two planks. 2. பொருத்தம்; suitability. 3. நட்பு; friendship. 4. இசைவு; agreement. 5. திருத்தம்; exactness. இணங்கல் பெ. (n.) உடன்பாடு; consent. இணங்குதல் வி. (v.) மனம் பொருந்துதல், ஒத்துக்கொள்ளல்; to consent, comply with agree to. இணுக்கு பெ. (n.) I. கைப்பிடியளவு; little quantity as a handful of leaves from a plant. 2. இலைக்கொத்து; stalk with leaves. ஒருகருவேப்பிலையிணுக்குப் போதும். 3. வளார்; twig, forming pat of foliage. 4.கிளை முதலியவைகளின் இடைச்சந்து; fork or joining of a twig, its branch. இணை' வி. (v.) 1. ஒன்று சேர்தல்; join together get united. 'அனைத்துப் பள்ளிகளும் இணைந்து இந்தப் போட்டியை நடத்துகின்றனர்’. 2. ஒன்று மற்றொன்றில் சேர்தல், கூடுதல்; be linked with another; flow into the main river; join; mingle. இந்தச் சாலை தேசிய நெடுஞ்சாலையோடு இணைகிறது. இணைபெ.அ.(adj.) I. ஒத்த நிலை,சமம்; equal, match. 2. இரண்டாகச் சேர்ந்து இருப்பது அல்லது இருப்பவர்; pair. 3. இரட்டையரில் ஆண் அல்லது பெண்; துணை; mate, partner. 4.ஒன்றின் போக்கை ஒத்த மற்றொரு போக்கு; paralled. இணைத்தல் வி. (v.) 1. கட்டுதல்; to fasten together. 2. சேர்த்தல்; to link. 3. உவமித்தல்; to compare. இணைதல் வி. (v.) 1. சேர்தல்; to join. 2. இசைதல் ; to agree. 3. ஒத்தல்; to be like, to resemble. 4. கூடுதல்; to couple. இணைப்பு பெ. (n.) 1. இசைப்பு; union, connection, coupling. 2. ஒப்பு; equality, similarity.