பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434

வாட்டுச்

வாட்டு'விட (vi) 1. நெருப்பிற் சுடு; தீயில் வேகவை; roast; grill. 2. வருத்து; கவலைகொள்; toment.

வாடகை பெ. (n.) பயன்பாட்டிற்குக் கூலியாகத் தரும் பணம்; rent, hire. வாடகைத்தாய் பெ. (n.) செயற்கை கருவைச் சுமக்கும் பெண்; surrogate

mcther:

வாடஞ்சம்பா (வாடன் சம்பா) பெ. (n.) மட்ட நெல்வகை; an infcrior kind of paddy.

வாடல் பெ. (n.) I. வாடுகை; வாடிய நிலை; withering, drying. 2. வாடின பொருள்; that which in faded, 3.உலர்ந்த: faded. வாடல்நோய் பெ. (n.) இலையைப் பாதிக்கும் பூஞ்சனைதோய்; wilt. வாடாத்தாமரை பெ. (n.) மன்னர்கள் பாணர்க்கு அளிக்கும் பொற்றாமரை;

lotus-shaped omament of gold, presented, to singers (panars) by ancient kings.

வாடாப்பூ பெ. (n.) வாடாமல்லிகை; தென்னம்பூ ; பனம்பூ, பறிக்காத பூ; unfaded and unplucked flowers. வாடாமல்லி பெ. (n.) இறுதிவரை உலர்ந்தும் நிறம் மாறா பூவகை; akind

of flower which does not lose orignial colour in withering.

வாடாலள்ளி பெ. (n.) I. கூத்து; a kind of dance. 2. ஓவியம்; படம்; painting; picture.

வாடாவிளக்கு பெ. (n.) நந்தாவிளக்கு; perpetually burning lamp.

வாடி'பெ. (n) விறகு, மரம் முதலானவை விற்கும் இடம்; மரவாடி; yard, shed, where firewood and timber are stocked and sold.

வாடி’பெ. (n.) குடிசை; hut. வாடி* பெ. (n.) I. தொட்டாற் சுருங்கிச் செடி வகை; touch me not plant a kind of sansitive plant. 2. தோட்டம்; garden. 3. முற்றம்; courtyard, 4, வீடு; house.

5. மீனுலர்த்துமிடம்;

fish-curing yard, 6. பட்டி: village, hamlet. 7.சாவடி;

rest- house. 8. காணியக்காரரின் புல் வேய்ந்த மூங்கிற்குடிசை; hunt cottage made of grass and bamboo. 9. அடிப் பீடம்: enloure, fenced place, 10. மர வாடி; timber depo.

வாடிக்கை பெ. (n.) I. வழக்கம்; habit. 2. வழக்கமாகப் பற்றுவரவு செய்கை; custom, as in dealing. 3. முறை; usage. 4. வாடிக்கைக்காரர்-யாளர் வழக்க மான நுகர்வோர்; customer. வாடிக்கைக்காரர் பெ. (n.) I. வழக்கமாக ஓரிடத்தில் பற்று வரவு செய்வோர்; customer. 2. பண்டங்களை வழக்க மாக ஓரிடத்து விலைக்குக் கொடுத்து விடுவோன்; customary supplier of goods. வாடிவாசல் பெ. (n.) 1. அரண்மனை வாசல்; entrance hall of a palace or rmansion. 2. முல்லை நில மாட்டுத் தொழுவாசல்; entrance of cowshed in mullai tract. 3. இடையர் குடியிருப்பு வாசல்; entrance of idaiyar colony. 4. சல்லிக்கட்டுக் காளைகளை அடைத்து வைத்திருக்கும் வாசல்; small entrance in the narrow passage between the ground and the place where the bulls are kept in the sport of jallikkattu. 5. பாசறைவாசல்; entrance of encampment.

வாடிவீடு பெ. (n.) 1. ஓய்வு விடுதி; rest house. 2. மன்னன் தங்கல் மனை; royal

rest house.

வாடிவேலி பெ. (n.) சிற்றூரின் எல்லைக் குறி; the boundary line of a village. வாடுதல் வி. (v.) 1. உலர்தல்; to wither, fade, dry up. 2. மெலிதல்; to be emaciated;

to become weak to become so lean. 3. மனமழிதல்; to pine away, grieve. 4. பொலிவழிதல்; to tum pale. 5. தோல்வியடைதல்; to be defeated. 6. கெடுதல்; to perish. 7. தீங்குதல்; to beremoved. & குறைதல்; to deminish, decreast. 9. எடைகுறைதல்; to fall short in weight.