பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 இமைகொட்டுதல் 3. கண்ணிமைப்பொழுது; time pent in winking. 4. கண்ணிமை மயிர், கண் பீலி; eyelash. இமைகொட்டுதல் வி. (v.) கண்ணிதழ் சேர்தல்; to wink, twinkle. இமைத்தல் வி. (vi) I. இமை கொட்டுதல்; to wink. 2. ஒளிவிடுதல்; to glitter, twinkle, shine. 3. சுருங்குதல்; to diminish, shrink. இமைப்பொழுது பெ. (n) கண்ணிமைக்கும் நேரம்; brief moment of time as the twinkling of the eye. இமையாடுதல் வி. (v.) கண்கொட்டுதல்; wink as the eyes. இமையோரம் பெ. (n.) மயிர் முளைத் திருக்கும் கண்ணிமையின் நுளி; edge or the margin of the eye lids. இயக்குதல் வி. (v) 1. செலுத்துதல்; to drive, cause to go. 2. தொழிற்படுத் துதல்; to activate and influence the movements of as God prompts all living beings. 3. பழக்குதல்; to train or break in as a bull or a hore. 4. ஒலிப்பித்தல்; to cause to sound. 5. தடத்துதல்; ta conduct. இயக்குநர் பெ. (n) I. திரைப்படம், நாடகம், தொலைக்காட்சி நிகழ்ச்சி போன்ற வற்றை இயக்குபவர்; (ofa film or play, ctc.,) 2. ஒரு நிறுவனத்தின் அல்லது ஓர் அரசுத் துறையின் உயர் நிர்வாகத் தலைவர்; director (of an institution, a department of the government, etc.,). இயங்குதல் வி. (v.) 1. அசைதல்; to move stir.2. போதல்; to go, travel, proceed. 3. உலாவுதல்; to walk about, promenade. இயல்(லு)தல் விட (v.) I. கூடியதாதல்; to be possible. 2. நேர்தல்; happen. 3. பொருந்துதல்; to be associated with. 4.தங்குதல் ; to abide. 5. செய்யப் படுதல்; to be made. 6. அசைதல்; to move, dance. 7. நடத்தல்; to move forward. 8. உலாவுதல்; to walk about gaily. 9. உடன்படுதல்; to accept. 10. அணுருதல்; approach. 17. ஒத்தல்; to resemble. 12. போட்டியிடுதல்; to competite. இயல்பு பெ. (n.) 1. தன்மை; nature. 2. ஒழுக்கம்; proper behaviour. 3. நற்குணம்; geechess. 4. முறை: prescribed code of conduct. இயலாமை பெ.(n.) கூடாமை; inability, impossibility. இயற்கை பெ. (n.) 1. (மாந்தனால் உருவாக்கப்படாமல்) தானாகவே உலகில் காணப்படும் மலை, நீர் நிலை, நிலம் போன்றவற்றையும், தானாக உருவாகும் மழை, காற்று, இடி,மின்னல் போன்றவற்றையும் குறிக்கும் சொல்; nature. 2. மாத்தன், விலங்கு இவர்களுக்குரிய இயல்பான பண்பு: natural habits. அவர் பேச்சும், சிரிப்பும், நடத்தையும் இயற்கையாக இல்லை'. இயற்பெயர் பெ. (n.) I. வழங்குதற்கு இடப்பட்ட சிறப்புப் பெயர்; proper name. 2. பெற்றோரிட்ட பெயர்; christened name. இயற்றுதல் வி (v.) I. செய்தல்; to do, make, perform, effect, execute. 2. நடத்துதல்; to cause to act. 3. பொருள் தேடல்; to eam. 4. தோற்றுவித்தல்; to create. 5. நூல் செய்தல்; to compose, to write as a book. இரக்கம் பெ. (n.) 1. அருள்; mercy, grace. 2. மனவுருக்கம்; pity, compassion. 3. மனவருத்தம்; regret, soTow. 4. ஒலி; sound. இரட்டித்துச் சொல்லுதல் வி. (v.) 1. மீட்டுங் கூறுதல்; to repeat. 2. மாறு