பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 இரண்டாம் போகம் இரண்டாம் போகம் பெ. (n.) இரண்டா முறைப் பயிர் விளைவு; second crop raised on land in a year. இரண்டிலொன்று பெ. (n.) இறுதி முடிவு; final decision. இரண்டுங்கெட்ட நேரம் பெ. (n.) I. அந்திப் பொழுது; dusk of the evening which is neither day or night. 2. பொருத்த மில்லா நேரம்; not suitable time. இரண்டுங்கெட்டான் பெ.(n.) 1.நடத் தையைக் கொண்டு பார்க்கும் போது நல்லது கெட்டதைப் பிரித்துப் பார்க்கவோ அறிவாளியாக தடத்து கொள்ளவோ தெரியாதவர்; (callow person; naive person). 2. எந்தச் செயலுக்கும் ஏற்றதாக இல்லாத, இன்னது என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத வகை; inconvenient, inopportune. be divided. இரண்டுபடுதல் வி. (v.) I. பகைமையால் குடும்பம், ஊர் முதலானவை இரண்டாகப் பிரிதல்; offamily, village, etc, split, into two (opposing factions); 2. ஓர் இடம் ஆரவாரத்தோடு காணப்படுதல்; (of a place) be tumultuous (because of riotous revelry or celebration. விடுமுறை நாட்கள் என்றால் பிள்ளைகளால் வீடே இரண்டுபடும். இரண்டுபண்ணுதல் வி. (v.) 1. புரளி பண்ணுதல்; to tease. 2. வேற்றுமை உண்டாக்குதல்; to cause to disagree. இரண்டெட்டில் கு.வி.எ. (adv.) I. விரை வில்; very soon; quickly, literally in two strides. 2. வெகு அண்மையில்; very near. 'அவர் வீடு என் வீட்டிலிருந்து இரண்டெட்டில் இருக்கிறது'. இரப்பை பெ.(n.) இமையிதழ்; eyelid. இரவல் பெ. (n.) 1. ஒரு பொருளையோ, பணத்தையோ கடனாகப் பிறரிடம் வேண்டிப் பெறுதல்; borowing from other's as loan. 2. மீண்டும் தருவதாகக் கொண்ட பொருள்; materials borrowed. இரவுபகல் பெ. (n.) இராக்காலமும் பகற் காலமும்; day and night. இரவுபகலாக வி.அ. (adv.) ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக நடை பெறுதல்; all the time. 'என் அப்பா இரவு பகலாக உழைத்துக் கட்டிய வீடு. இரவோடு இரவாக வி.அ. (adv.) ஒரு செயலைப் பிறர் அறியாவண்ணம் இரவில் செய்து முடிப்பது; in the darkness ofnight; by night சாலையோர மரத்தை இரவோடு இரவாக வெட்டிக் கொண்டு போய்விட்டார்கள். இரா பெ. (n.) இரவு; night. இராக்குருடு பெ.(n.) மாலைக்கண்; night blindnes, nyctalobia. இராட்டினம் பெ. (n.) 1. நூல் நூற்குங் கருவி; Spinning wheel. 2. நீரிறைக்கும் கருவி; machine drawing water. 3. பஞ் சரைக்குங் கருவி; machine for reeling. 4.ஏறி விளையாடும் சுழல் தேர்; giant wheel in which people ride and amuse themelves at festivals. இராத்தூக்கம் பெ. (n.) இரவுத் தூக்கம்; night sleep as opposed to day sleep. இராப்பகல் பெ. (n.) 1. இரவும் பகலும்; night and day. 2. எப்பொழுதும்; always. இராப்பள்ளிக்கூடம் பெ. (n.) இரவில் நடத்தப்படும் பள்ளி; night school. இராப்பாடி பெ. (n.) இரவில் வீடு வீடாகச் சென்று சோறு வாங்கும் துணி வெளுக்கும் தொழிலாளி; a laundry man who begging at night. இராப்பிச்சை பெ. (n.) இரவில் எடுக்கும் பிச்சை; begging at night. இருகூறு பெ.(n.) 1. இரண்டு பங்கு; two parts, two shares. 2. மாறானது, எதிரானது; opposition, contrariety.