பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 இலைச்சருகு இலைச்சருகு பெ. (n.) உலர்ந்த இலை; dry leaves. இலைச்சாறு பெ. (n.) இலையிளின்று பிழிந்த சாறு;juice extracted from leaves. இலைச்சுருள் பெ. (n.) வெற்றிலைச்சுகுன்; roll of betel leaves. இலைபோடுதல் வி. (v.) உணவுக்கு இலைக்கலம் இடுதல்; to set leafplates in order to serve food. இலைமறைகாய் பெ. (n.) மறைபொருள்; meaning in an expression. இலையடை பெ. (n.) அப்பவகை;akindof flat sweet cake prepared by steaming the dough enclosed in a leaf. இலையப்பம் பெ. (n.) இலையடை பார்க்க: see ilai-y-ndai. இலையுதிர்காலம் பெ. (n.) இவைகள் உதிர்தற்குரிய பருவம்; season when leaves wither from trees, autumn. இலைவடகம் பெ. (n.) அரிசிக் கூழை இலையில் ஊற்றிக் காய வைத்து எடுக்கும் வடகம்; wafers of rice flour prepared on leaves. லைவடாம் பெ. (n.) இலைவடகம் பார்க்க; see ilai vadagam. இவ்விரண்டு பெ. (n.) I. தனித்தனி இரண்டு; to each. 'ஆளுக்கு இவ் விரண்டு கொடுத்தான். 2. இந்த இரண்டு; these two. இவள் சு.பெ.(demons.pron.) பெண்ணைக் குறிக்கும் அண்மைச்சுட்டுச் சொல்; this woman or girl; she used to denote the female among rational beings. இவன் சு.பெ. (demons.pron.) ஆணைக் குறிக்கும் சொல்; this man or this boy. இழப்பு பெ. (n.) இழக்கை; loss. இழவு பெ. (n.) I. இழப்பு; loss. 2. கேடு; distruction, ruin. 3. சாவு; death. 4. funeral. இறுதிச் சடங்கு; 5.தொந்தரவு; trouble, wony. 6. எச்சில்; leavings in plates after cating. 7. வறுமை; destitution. இழவுகாத்தல் வி. (v.) சாவுத் துயரங் கொண்டிருத்தல்; to stay at home to mourn till the eighth day after the funeral ceremony. இழவுகாரன் பெ. (n.) சாவுக்குரியவன்; mourner. இழவு கூட்டுதல் வி. (v.) தொல்லையுண் டாக்குதல்; to cause confusion and uproar as at a funeral to create trouble. இழவுகொடுத்தல் வி. (v.) இழவு கூட்டு பார்க்க. இழவு சொல்லுதல் வி. (v.) சாவறிவித்தல்; to give intimation conceming a funeral. இழவு விழுதல் வி (v.) இறப்பு நேரிடுதல்; to be full as death. இழவு விடு பெ. (.) சாவீடு; house where a death has occurred. இழிவு பெ. (n.) 1. தாழ்வு; inferiority, lowness. 2. இகழ்ச்சி; disgrace, dishonour. 3. மதிப்புக் குறைவு: diminution, decrease. 4. கேடு; uin, destruction. 5. குற்றம்; fault. 6. தீட்டு; pollution. 7. பள்ளம்; depression, hollow. இழிவுபடுத்தல் பெ. (n.) தாழ்வுபடுத்தல்; demean இழுக்கடித்தல் வி. (v.) அலைய வைத்தல்; cause vexatious trouble to a person by constantly putting off the fulfilment of an obligation to him. இழுக்கு பெ. (n.) 1. பொல்லாங்கு; wickedness. 2. இகழ்ச்சி; disgrace. 3.வழு; defect. 4. தாழ்வு; inferiority. 5. மாறி; forgetfulness. 6. வழுக்கு நிலம்; slippery ground. இழுத்தல் வி. (v.) 1. ஈர்த்தல்; to draw. 2. கவர்தல்; attract as a magnet.