பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.வயப்படுத்துதல்; to influence. 4. நீளச் செய்தல்; to lengthen, stretch. 5.வலித்து தொடர்புபடுத்துதல்; to drag one into an affair. 6. கால நீட்டித்தல்; to protect as time. 7. ஒலியை நீட்டுதல் ; to lengthen as the sound in singing, speaking or in reading. 8. உள் வாங்குதல்; to swallow up. 9.உறிஞ்சுதல்; to absorb as a sponge. 10.வலிப்புண்டாதல்; to be twitched with pain often used impersonally. இழுத்துக்கொண்டுபோதல் வி. (v.) எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாக செலவாகுதல்; (of expenditure) go beyond the estimate. இழுத்துப்பறித்தல் வி. (v.) 1. வலிந்து கொள்ளுதல்; to take away by force. 2.பெருமுயற்சி செய்தல்; put forth great and protracted effort. 3. போராடுதல்; to struggle against contend. இழுத்துப்பிடித்தல் வி. (v.) செலவு செய்வதில் கட்டுப்பாட்டுடன் இருத்தல்; rein in or control expenditure. இழுத்துப்பேசுதல் வி. (v.) 1. நிறுத்தி மெல்லப் பேசுதல்; to speak slowly in a measured manner. 2. தழுவ விட்டுப் பேசுதல் ; to speak evasively. இழுத்துப்போட்டுக்கொள்தல் வி. (v.) வேலை அல்லது பொறுப்பை வலிய ஏற்றுக்கொள்ளுதல்; take upon oneself work or responsibilities, etc., voluntarily. இழுத்துவிடுதல் வி. (v.) ஒருவரைச் சிக்கலில் மாட்டவைத்தல்; land something in a difficult situation. இழுபறி பெ.(n.) 1. பணியில் சுணக்கம்; delay. 2. இடைஞ்சல்; obstruction. இழுபறி? பெ. (n.) முடிவு எவ்வாறு இருக்கும் என்பது தெரியாத நிலை; உறுதியற்ற நிலை; uncertainty. இழுப்பறை பெ. (n.) மிசையில் (மேஜையில்) வெளியே இழுக்கக் இழைத்தல் 43 கூடிய முறையில் உள்ள மேல்புறம் திறந்திருக்கும் பெட்டி; drawer in a table. இழுப்பாட்டம் பெ. (n.) நிச்சயமற்ற நிலை, இழுபறி; (state of) uncertainty. இழுப்பு பெ. (n.) 1. இழுத்தல்; act of hauling. 4. 2.வலிப்பு (நோய்); fits, spasm. 3.புகை, பொடி முதலியவற்றை உறிஞ்சுதல்; drawing on, draging. மூச்சுத்திணறல்; wheezing. 5. பேச்சில் தயக்கத்தைக் காட்டும் நீட்டிப்பு; drawl. 'ஐயா..... என்று இழுக்கிறே. சொல் என்றார் முதலாளி. 6.நீரின் (வேகம்) விரைவு; water current. 'ஆற்றின் நடுவே இழுப்பு அதிகம்'. இழுவை (ரயில்) தொடரி பெ. (n.) மலைப்பகுதிகளில் சுமையை இழுத்துச் செல்லப் பயன்படும் இரண்டு உறுதியான கம்பிகளின் வழியே நகரும் தொடரி; cable car, winch. இழை பெ. (n.) 1. நூல்; yam. 2. நூலிழை; daming. 3. கல் இழைத்த அணிகலன்; omament. 4. மகளிர் அணிவடம்; kind of necklace, garland. 5. கையிற் கட்டுங் காப்பு; string tied about the wrist for a VOW. இழைக்கயிறு பெ. (n.) 1.நூற்கயிறு ; cord, piece of string. 2. காப்பு நூல்; thread or string fastened as an amulet about the hair on the amor around a tree. 3. பந்தல் போன்றவைக் கட்டப் பயன்படும் தேங்காய் தாரை முறுக்கித் தயாரிக்கும் மெல்லிய கயிறு; rope made from coconut husk. இழைத்தல் வி. (v.) I. மரச்சட்டம் மற்றும் பலகைகளை வழவழப்பாக்கவும், மெருகேற்றவும் இழைப்புளியால் சீவுதல், தேய்த்தல்; plane (a piece of wood). 2.சந்தனம், மஞ்சள் முதலிய