பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 இழைதல் வற்றைச் சிறிது தண்ணீர் விட்டுக்கல் போன்றவற்றில் தேய்த்தல்; rub (sandal wood, turmeric, etc., on a slab stone with a few drops of water to obtain a paste. ஒள்ளிழைக்கரையால் சேலை அல்லது கரை நெய்தல்; brocade. 4. முத்து முதலிய மணிகளைப் பதித்தல்; set (pearl, stones, etc., in a piece of jewellery) be inlaid with. கல் இழைத்த அட்டிகை'. இழைதல் வி. (v.) 1. உணர்வு புரியும் தன்மையில் வெளிப்படுதல்; be shot through with affection etc,. 'அவள் குரலில் பாசம் இழைந்தது. 2. இணைதல்; blend (hamoniously). குழலின் இசையும் வீணையின் நாதமும் இழைந்து மனதை மயக்கின.3.ஒட்டி உறவாடுதல்; be chummy. 4. உடை உடலோடு பொருந்திப் படிந்திருத்தல்; (ofclothes) be flowing on some one's body. இழைப்பு பெ. (n.) ஊதை (காச ) நோய்; asthma. இழைப்புளி பெ. (n.) இழைக்கும் தச்சுக் கருவி; tool for smoothening wooden surface, joiners plane, trying plane. இழையோடுதல் வி. (v.) I. ஒரு செய்தி அல்லது உணர்வு ஒன்றின் பின் புலத்தில் ஊடுருவி இருத்தல்; be threaded with (feelings, emotions, etc.,). அவர் பேச்சில் துன்பம் இழை யோடியது.2.மூச்சு மிகச் சிறியதாக வெளிப்படுதல்; breath be a faint trace. உயிர் இன்னும் போகவில்லை, மூச்சு இழையோடுகிறது'. இளக்கம் பெ. (n.) தெகிழ்வுத்தன்மை; State of being loose. இளக்காரம் பெ. (n.) ஒருவரை இகழ்வாகப் பேசி, பகடி செய்து மதிக்காமல் நடந்து கொள்ளும் போக்கு; tendency to slight, humiliate or look down upon. 'அவன் அவளை இளக்காரமாகப் பேசினான். இளக்குதல் வி. (v.) கெட்டித் தன்மை யிலிருந்து நெகிழச் செய்தல்; melt, liquefy. இளகுதல் வி. (v.) கெட்டித்தன்மை இழத்தல்; soften, melt slightly. இளங்கதிர் பெ. (n.) I. பயிரின் முற்றாக் கதிர்; tender ears of corn. 2. எழு ஞாயிற்றின் மெல்லிய கதிர்; early rays of the sun. 3. எழு ஞாயிறு; early moming. இளங்கருக்கு பெ. (n.) சிறிது காய்ச்சிய கருக்கு (கசாயம்); decoction. இளங்கலை பெ.(n.) பல்கலைக்கழகப் படிப்பில் முதல்நிலைப் பட்டப் படிப்பு; undergraduate (course). இளங்கள் பெ. (n.) புளிக்காத கள், இனிப்புக்கள்; Sweet toddy. இளங்கன்று பெ. (n.) 1. இளம்பருவக் கன்று; young calf. 2. மரக்கன்று; sapling. இளங்காய் பெ.(n.) முதிராக் காய்; fruit just formed. இளங்காலை பெ. (n.) I. வைகறை; carly moming. 2. இளமைப்பருவம்; period of youth. இளங்காற்று பெ. (n.) மெல்லிய காற்று; gentle breeze. இளங்குடல் பெ. (n.) 1. கடைக்குடல்; rectum. 2. சிறிய குழந்தையின் குடல்; the soft bowels of a child. இளங்குருத்து பெ. (n.) முதுமையில்லாத குருத்து ; tender shoot. இளங்குழம்பு பெ. (n.) திண்ணமில்லாத சாறு; ஒருவகைக் குழம்பு; a kind of loose broth. இளங்கொடி பெ. (n.) I. கொடி போன்ற உடலமைப்புள்ள இளம் பெண்; $lim woman as resembling a young vine. 2.ஆவின் நஞ்சுக்கொடி; after birth of a cow. 3. முதிராத கொடி; tendrill.