பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளசு பெ. (n.) I. காய்கறி, தேங்காய் போன்றவற்றைக் குறிப்பிடும்போது முற்றாதது;(of vegetables, coconut, etc., tender). 2. (பெரும்பாலும் பன்மையில்) இளம் பெண் அல்லது இளம் பெண்ணும் ஆணும்; (in plural) young or young people, the youth. இளஞ்சாயம் பெ. (n.) சிறிது தோய்த்த சாயம்; பற்றாத சாயம்; slight tinge in dyeing. இளஞ்சிவப்பு பெ.(n.) வெண்சிவப்பு; light red, pink. heat, warmth. இளரத்தம் 45 இளம்பச்சை பெ. (n.) வெளிறிய பச்சை; whitish green, light green. இளம்பதம் பெ. (n.) 1. முற்றா நிலை; immaturity. 2. மருந்தெண்ணெய் முதலியன காய்ச்சுவதில் இளம் பாகம்; consistency of a liquid resulting from the slow application of uniform gentle heat as in the preparation of medicinal oils. 3. சிறிது வெந்த நிலை; state of being moderately prepared as in cooking, parching, toasting. இளஞ்சூடு பெ. (n.) வெதுவெதுப்பு; gentle இளம்பருவம் பெ. (n.) 1. இளமை; young age. 2. மெல்லிய பதம்; under cooked. இளம்பிள்ளை பெ. (n.) சிறுபிள்ளை; baby, infant, child. இளஞ்சூல் பெ. (n.) 1. பயிரிளங்கரு; young ears of com which have not yet shot forth. 2. முதிராக் கரு; embryo. இளந்தண்டு பெ. (n.) முளைக்கீரை; plant the leaves of which serves as a pot herb. இளந்தயிர் பெ.(n.) முற்றும் உறையாத புளிக்காத தயிர்; half - curdled milk. இளந்தாரிக்கல் பெ. (n.) இளவட்டக்கல் பார்க்க. இளந்தென்றல் பெ. (n.) தென் திக்கிலிருந்து வீசும் மெல்லிய காற்று; gentle breeze from the south. இளந்தேகம் பெ. (n.) I. இளமை உடம்பு; to body of a young man. 2. குழந்தை பெற்ற பெண்ணின் உடம்பு; the delicate body of a woman immediately after child birth. 3. குழந்தை உடம்பு; child's body. இளநாக்கடித்தல் வி. (v.) உடன் பாடின்மை போற் காட்டுதல்; feign reluctance. இள நீலம் பெ. (n.) வெளிறிய நீலம்; light blue. இளப்பம் பெ.(n.) மதிப்புக்குறைவு; disgrace. இளம்பிள்ளைவாதம் பெ. (n.) குழந்தை களின் கைகால் வளர்ச்சியைத் தாக்கி அவற்றின் இயங்கு ஆற்றலை முடக்கும் ஒருவகைத் தொற்றுநோய்; poliomyelitis. இளம்புடம் பெ. (n.) சிறியபுடம்; small fre for calcination. இளமண்டை பெ. (n.) சிறிய, மெல்லிய தலை, குழந்தையின் தலையோடு; skull of a child. இளமரக்கா பெ. (n.) வயல் சூழ்ந்த சோலை; grove reared in the midst of green fields. இளமை பெ. (n.) I. இளம்பருவத்து அழகிய தோற்றம்; childhood, youthfulness. 2. DGD; tenderness. 3. அறிவு முதிராமை; immaturity of knowledge and intellect. 4. ஒன்றை வேறொன்றாக மயக்கும் மயக்கம்; illusion. இளரத்தம் பெ. (n.) விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் துணிச்சலுடன் எதையும் செய்ய முயலும் இளம் அகவை; daring young age; impetuous blood (of youth).