பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறகு பெ. (n.) 1. சிறகு; wing, pinion. 2. தனியிறகு; feather, quill. 3. மயிற் பீலி; peacock's feather. இறகுக்கூடு பெ. (n.) தூவல் (பேனா) வைக்குங் கூடு; penrack. இறங்குநெற்றி பெ. (n.) முன்பக்கமாகப் புடைத்துக் காணும் நெற்றி; arounded eminence projecting on the surface of the forehead. It is opposed to ஏறு நெற்றி. receding forehead. இறங்குபொழுது பெ. (n.) பிற்பகல்; afternoon, the period of the Sun's declivity from the point overhead. இறங்குமுகம் பெ. (n.) தணியும் நிலை; declination, ebb in affairs. இறங்குவெயில் பெ. (n.) பிற்பகல் வெயில்; decreasing, sunshine as the Sun descends towards the horizon. இறத்தல் வி. (v.) சாதல்; to die. இறந்த காலம் பெ. (n.) ஒரு செயல் நடந்து முடிந்த காலம்; past time (denoted by past tense). இறந்துபோதல் பெ. (n.) சாதல்; to die. இறப்பு' பெ. (n.) சாவு; death. இறப்பு* பெ.(n.) வீட்டுக் கூரையின் சாய்வு;rafter. இறவாணம் பெ. (n.) கூரையின் உள்பக்கச் சரிவின் கீழ்ப்பகுதி; eaves of a thatched roof. 'சத்தம் கேட்டதும் இறவாணத்தில் செருகியிருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். இறவை பெ. (n.) தீர் நிலைகளிலிருந்து நீரை இறைத்துப் பாசனம் செய்யும் முறை; lift irigation. இறுக்கம் பெ.(n.) 1. நெகிழ்வோ தொய்வோ இடைவெளியோ இல்லாத தன்மை; அழுத்தம்; உறுதி; being taut; tightness, closeness, 2.கட்டுப்பாடுகளைக் கடைபிடிப் பதில் உறுதி; firmness. 3. எரிச்சல், கோபம் முதலிய உணர்ச்சிகளால் இறுதி மரியாதை 47 முகத்தில் ஏற்படும் கடுமை; teaseness. 4. பழக்கமில்லாத இடத்தில், சூழ்நிலையில் ஏற்படும் இயல்பாக இல்லாத நிலை; tenseness. 5. எழுத்தின் கருத்து ஓட்டத்திலும், மொழிநடையிலும் தளர்வு இல்லாத போக்கு, செறிவு; terseness. இறுக்குதல் வி. (v.) நெகிழ்வில்லாமல் அழுத்திப் பிடித்தல், கட்டுதல்; keep close or tight. இறுக வி.அ. (adv.) இடைவெளி யில்லாமலிருக்கை; tight. 'கண்களை இறுக மூடிக்கொண்டு சிந்தித்தான். இறுகுதல் வி. (v.) மென்மை அல்லது இளகிய தன்மை இழந்து கடினத் தன்மையடைதல், கெட்டிப்படுதல்; harden, become firm. இறுத்தல் வி. (v.) நீர் முதலியவற்றில் தெளிந்த பகுதியை வடித்தல்; decant. இறுதி பெ. (n.) முடிவு; the last, end. இறுதி ஊர்வலம் பெ. (n.) இறந்தவரின் உடலைத் தக்க மதிப்புடன் ஊர்வலமாக இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லுதல்; funeral procession, cortage. இறுதிக்காலம் பெ. (n.) 1. கடைசிக் காலம்; time of death. 2. ஊழிக்காலம்; end of all things. இறுதிச் சடங்கு பெ. (n.) இறந்துபோன ஒருவரை அடக்கம் செய்ய பின் பற்றும் சடங்கு முறை; funeral rites. இறுதிசெய்தல் வி. (v.) திட்டம், உடன்பாடு முதலியவற்றைக் குறித்து உறுதி முடிவுக்கு வருதல்; finalize something. தேர்தல் கூட்டணி பற்றி பிறகு இறுதி செய்யப்படும்'. இறுதி மரியாதை பெ. (n.) புகழ் பெற்றவர்கள் இறந்துபோகும் போது, அவர் உடல் முன் நின்று வணங்குகை; homage to a celebrity on his death; last respects.