பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 இறுதியாக இறுதியாக வி.அ. (adv.) ஒன்றை முடிக்கும் வகையில் கூறுவது, கடைசியாக; finally. இறுமாப்பு பெ. (n.) பிறரை விட உயர்வாகத் தன்னைப் பற்றி ஒருவர் கொள்ளும் செருக்கு; pride, arrogance. இறைச்சி பெ. (n.) உணவாகும் பறவை, விலங்கு, மீன் போன்றவற்றின் கறி, சதைப்பகுதி; meat. இறைத்தல் வி. (v.) 1. நீரை வெளிக் கொண்டு வருதல், வெளியேற்றுதல்; draw water from a well, pump out from a pit, mine, etc., 'கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக்கொண்டு வா'. 2.பொருள்களைச் சிதறிப் போடுதல்; be spread in all directions; be scattered. இறையாண்மை பெ. (n.) ஒரு நாடு முழு விடுதலையுடனும்,அதிகாரத்துடனும் தன் செயல்பாடுகளை ஆளுகைக் கொள்ளும் நிலை; soveriegnty. இறைவன் பெ. (n.) கடவுள்; God. இறைவி பெ. (n.) கோவிலில் எழுந்தருளி யிருக்கும் பெண் தெய்வம்; presiding female deity. இன்பம் பெ. (n.) புலன்களுக்கும், மனத்திற்கும் இனிமை அளிக்கும் உணர்வு; மகிழ்ச்சி; joy, pleasure. இன்புறுதல் வி. (v.) மகிழ்ச்சியடைதல்; derive pleasure, enjoy. 'நூலைப் படித்துக் காட்டி மற்றவரை இன்புறச் செய்யலாம். இன்மை பெ. (n.) இல்லாதிருக்கும் நிலை; state of being without (something); absence. இன்றி வி.அ. (adv.) இல்லாமல்; without. அவனன்றி ஓர் அணுவும் அசையாது'. இன்றியமையாமை பெ. (n.) தவிர்க்க இயலாத தன்மை; indispensability. இன்று நேற்று பெ.அ (adj.) பெரும்பாலும் எதிர்மறைத் தொடர்களில் வரும் போது அண்மைக் காலத்தில் என்பதைக் குறிப்பிடுவது; (mostly in the negative) recent. இன்றைக்கெல்லாம் வி.அ. (adv.) சலிப் படையாமல் நீண்ட நேரம் பேசுவ தையோ, பார்ப்பதையோ கூறுவது; ever. 'பறவை முனியம்மாள் பாட்டு என்றால் இன்றைக்கெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம் அப்படி ஓர் இனிமை. இன்றைய பெ.எ. (adj.) 1. இந்த நாளினுடைய; this day's; today's இன்றைய விளையாட்டு அவ்வளவு சிறப்பாகவில்லை'. 2. இந்தக் காலத்தில் இருக்கிற, இந்தக்காலத்தி னுடைய; of this present time. இன்றைய முதலீடு நாளைய லாபம்'. இன்றைய தேதி பெ. (n.) பேசப்படும் காலப்பொழுது; as of today. இன்பதுன்பம் பெ. (n.) தலமும் கேடும்; joy and sorrow, pleasure and pain. இன்னது பெ. (n.) இத்தன்மையுடையது; precisely this, of this nature. 'அழாமல் இன்னது வேண்டுமென்று கேள். இன்னமும் கு.வி.எ. (adv.) இன்னும்; yet. இன்னபிற பெ.எ. (adj.) ஒரு தொகுப் பாகக் கூறப்பட்டவை மட்டுமல் லாமல் இவை போன்ற பிற என்பதைக் குறிப்பிடுவது; similar and so on. காய்கறிகள், பழங்கள் இன்னபிற பொருள்களும் வாங்க வேண்டும்'. இன்னபிறர் பெ.(n.) ஒரு தொகுப்பாகக் கூறப்பட்டுள்ளவர்கள் மட்டுமல் லாமல் இவர்கள் போன்ற பிறர்; and those similar. இன்னல் பெ. (n.) துன்பம், தொல்லை; distress, difficulty, hardship. இன்னமும் வி.அ. (adv.) இது வரையிலும்; yet, still, till now. 'தேர் இன்னமும் கிளம்பவில்லை'.