பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடைவாள் பெ. (n.) உடையில் செருகி வைத்திருக்கும் வாள்; short scimitar, sword. உண்டாக்குதல் வி. (v.) I. படைத்தல், தோற்றுவித்தல்; create, make. உலகத்தை (அண்டத்தை) உண்டாக் கியவன் இறைவனே என்பது சமயங்களின் கருத்து'. 2. விளை வாக்கம் செய்தல்; produce. 'தரிசு நிலத்தில் தன் கடும் உழைப்பால் பயிரை உண்டாக்கினார். 3. ஒலி, ஒளி ஆகியவற்றை ஏற்படுத்துதல்; make sound and light. இருளின் நடுவே ஒளியை உண்டாக்கினார். 4. கட்டடம் போன்றவற்றை உருவாக்குதல்; construct, build. இராசராசன் உண்டாக்கிய கோவில்'. 5. நிறுவனம் போன்றவற்றைத் தோற்றுவித்தல்; establish an institution etc., found. 6.தகரம், மாவட்டம் போன்றவற்றை உருவாக் குதல்; fom of city and district. இரு மாவட்டங்களிலிருந்தும் சில பகுதிகளைப் பிரித்துப் புதிய மாவட்டம் உண்டாக்கப்பட்டது'. 7. ஆட்சி, அமைப்புப் போன்ற வற்றைத் தோற்றுவித்தல்; establish, start. 8. குறிப்பிட்ட மாற்றம், வடிவம் போன்றவற்றை ஏற்படுத்துதல்; உருவாக்குதல்; create, make. நிலநடுக்கம் பெரும்பள்ளத்தை உண்டாக்கியது'. 9.குறிப்பிட்ட சூழல், தன்மை போன்றவற்றை விளைவித்தல்; bring about; create, start. வழக்கில் திடீர் திருப்பத்தை உண்டாக்கினான்'. 10. குறிப்பிட்ட உணர்வை ஏற்படுத்துதல்; evoke an emotion; produce. உண்டாகுதல் வி. (v.) 1. இயற்கையாக ஒன்று தோன்றுதல்; come into existence; get formed; get produced. அண்டம் எப்படி உண்டானது என்ற ஆய்வு செய்யப்பட்டுவருகிறது'. 2. குறிப்பிட்ட முறையில் ஒரு உண்டில்லையென்று 57 பொருள், ஆற்றல் உருவாதல்; get produced. மரபணு மாற்றத்தில் உண்டான காய்கறிகள்'. 3. கண்டு பிடிப்பால் ஒன்று உருவாதல்; develop through discovery. 'கணினி உண்டான வகை வியப்பளிக்கிறது. 4. குறிப் பிட்ட தன்மை, உணர்வு, சூழல் போன்றவை ஏற்படுதல்; (ofemotion, a situation etc.,) appear, get caused. அவருக்குச் சினம் உண்டாகும்படி நாம் நடக்கக்கூடாது. 5. நோய், காயம் ஏற்படுதல்; be caused. 6.அமைப்பு, கருத்து முதலியன உருவாகுதல்; get formed; appear. மொழிப்பற்று அனைவருக்கும் உண்டாக வேண்டும்'. 7. கருவுறுதல்; to conceive. உண்டாயிருத்தல் வி. (v.) கருவுற்றிருத்தல்; pregnancy. உண்டான பெ.எ. (adj.) உரிய; due; what is belonging to one. 'மகனுக்குண்டான பங்கைக் கொடுத்தார். உண்டியல் பெ. (n.) பணம், காணிக்கை ஆகியவற்றை இடுவதற்காக மேல் புறத்தில் நீளவாக்கில் திறப்புடைய பெட்டி போன்ற பொருள்; container for collecting contributions or used for saving money, with a slit for dropping in money; money box. உண்டிவில் பெ. (n.) 1. கவண்; $ling. 2.கவையின் இரு நுனிகளிலும் கட்டப் பட்ட தொய்வை (ரப்பர்) பட்டையின் நடுவில் சிறு கல்லை வைத்து இழுத்துவிடும்போது குறியைத் தாக்கப் பயன்படும் கருவி; catapult. உண்டி வில்லால் மாங்காய் அடித்தான். உண்டில்லையென்று வி.எ.(adv.) வாழ்வா சாவா என்ற இறுதிக்கட்ட அளவுக்கு; of rebuking or getting rebuked in such a way as to make one feel miserable.