பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 உதட்டுப்பிளவு உதட்டுப்பிளவு பெ. (n.) பிறவியிலேயே காணப்படும் பிளவுபட்ட உதடு; cleft lip. உதட்டைப் பிதுக்குதல் வி. (v.) உதட்டை வெளியே தள்ளுவதன் மூலம் 'இல்லை' 'தெரியாது' போன்ற பொருளை உணர்த்துதல் ; indicate one's negative answer (by curling the lower lip). உதடன் பெ. (n.) தடித்த உதடை யுடையவன்; thick lipped person or the blubber lipped. உதடி பெ. (n.) தடித்த உதடை யுடையவள்; blubber lipped woman. உதடு பெ.(n.) வாயிதழ்; lip. உதவாக்கரை பெ. (n.) 1. எவ்வகைப் பயனுமில்லாதது: useless. 2. பயனற்ற ஆள்; useless or worthless person; a good for nothing. உதவி பெ. (n.) 1. பிறர் நன்மை அடையும்படி செய்யும் செயல்; ஒத்தாசை; help; assistance. 2. ஒரு பொருளின் துணையால் பெறும் நன்மை; aid; help. உதவி பெ.(n.) பதவியில் அல்லது பணியில் உயர்நிலைக்கு அடுத்த கீழ்நிலையைக் குறிக்கும் சொல்; prefix equivalent to 'sub'; 'deputy' 'assistant'. 'உதவிப் பதிப்பாசிரியர். உதவித்தொகை பெ. (n.) 1. கல்வி கற்பதற்கு உதவும் வகையில் அரசு அல்லது தனியார் அமைப்பு குறிப்பிட்ட காலத்துக்கு வழங்கும் பணம்; scholarship. 2. இயற்கைச் சீற்றங்களில் சிக்குண்டவர்களுக்கு அரசு வழங்கும் துயரழிப்புப் (நிவாரணம்) பணம்; relief given in cash; ex-gratia cash payment. உதவுதல் வி. (v.) I. பயன்படுதல்; be helpful; be useful. 'நாம் தரும் நன்கொடை ஏழை மாணவர்களின் கல்விக்குப் பயன்படும்'. 2. ஒத்து ழைத்தல்,ஒத்தாசை செய்தல்; assist; help. உதறல் பெ. (n.) 1. குளிர், அச்சம் முதலியவற்றால் கை, கால் நடுங்குதல் ; trembling of the body, due to cold, fear etc., shiver. 2. விரைந்து அசைதல்; to move to and fro. to shake. உதறுதல் வி. (v.) 1. தூசி, அடைப்பைப் போக்க வலுவாக அசைத்து வீசுதல்; கத்தையாக இருப்பதைப் பிரிந்து விழுமாறு ஆட்டுதல்; flap vigorously; shake off dust, water etc., from one's body. 2. காலை மடக்கி நீட்டுதல்; shake in jerks (a sprained or be numbed hand or leg). சுளுக்கிக் கொண்ட காலை உதறி நீட்டினார். 3. அச்சம், குளிரால் நடுங்குதல்; tremble due to cold, fear etc., 4. விட்டுவிடுதல்; கைவிடுதல்; discard; cast off; give up in a huff. உதறுகாலி பெ. (n.) 1. காலை இழுத்து நடப்பவள்; woman who shakes her feet in walking, such gait being supposed to bring evil upon her household. உள்ளதையும் கெடுத்தாள் உதறு காலி. 2. உதை காற் பெற்றம் (பசு); cow that kicks or twitches away its leg and does not allow to be milked. உதித்தல்' வி. (v.) I. கோள்கள், விண்மீன்கள் ஆகியவை கண்ணுக்குப் புலனாகும்படி வானத்தில் தோன் றுதல்; (of sun or moon) rise; (of star) appear. 'சூரியன் கிழக்கில் உதித்தது. 2. மனத்தில் எண்ணம் தோன்றுதல்; (of a thought or idea) strike; occur to something. 3. ஆன்றோர் பிறத்தல்; to be bom as a great personage. 'பல சான்றோர் உதித்த நாடு நம் நாடு'. உதித்தல்2 வி. (v.) பருத்தல்; to swell, increase in size. ஆள் உதித்து விட்டான்.