பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

உதைத்துக்கொள்ளல்

உறுத்துதல்; அச்சப்படுதல்; feel the prick (of conscience); feel uneasy. 'குற்ற வுணர்வால் அவருக்கு உதைத்தது'. உதைத்துக்கொள்ளல் பெ. (n.) 1. அச்சத் தால், குளிரால் நடுக்கங் கொள்ளல்; shivering with cold; trembling with fear. 'காவலரைக் கண்டதும் திருடனுக்கு உதைத்துக் கொண்டது. 2. வலிப்பு அல்லது இழுப்பினால் கை கால் இழுத்துக்கொள்ளல்; violent and irregular motion of the limbs through; fits. 'காக்காய் வலிப்பு வந்ததால் கைகால் உதைத்துக் கொண்டது'. உதைசுவர் பெ. (n.) 1. முட்டுச்சுவர்; wall rest; buttress. 2. அணை சுவர்; supporting wall.

உதைப்பு பெ. (n.) தவறு செய்திருக்கும் போது உள்ளூர ஏற்படும் மனக் கலக்கம்; உதறல்; uneasy feeling; sense of guilt. வாடகை தராததால் வீட்டுக் காரனைப் பார்த்ததும் அவனுக்கு உதைப்பு ஏற்பட்டது'.

உதைபந்து பெ. (n.) கால்பந்து; football. உதைபந்தாட்டப் போட்டி நடை பெற்றது.

உந்தம் பெ. (n.) 1. உந்து விசையால் ஏற்படும் இயக்கம் (பொருளின் நிறையையும் அதன் திசைவேகத் தையும் பெருக்கினால் கிடைப்பது); momentum. 2. மின்சாரத்தாலோ கன்னெய் (பெட்ரோல்) உதவி யாலேயே சுழலும் பொறி; engine, motor).

உந்தல் பெ. (n.) உந்துதல் பார்க்க. உந்தி பெ. (n.) I.கொப்பூழ்; தொப்புள்; naval. 2. வயிறு; belly, stomach. உந்துதல்' வி. (v.) 1. முன்காலால் அழுத்துதல்; push; spring forward. அவள் ஊஞ்சலை உந்தி ஆடும் காட்சி பார்க்க அழகாக இருந்தது'.

2. முன்னோக்கித் தள்ளுதல்; of wind push forward. 'பாய்மரக் கப்பல் காற்றால் உந்தப்பட்டது. 3. தூண்டு தல்; urge; impel. 'தன்னார்வத்தால் உந்தப்பட்டு தொண்டு செய்தான். உந்துதல்' வி. (v.) தூண்டுதல், ஊக்கம்; urge; inducement, impetus. உந்துபலகை பெ. (n.) நீச்சல் குளத்தில் குதிப்பதற்கு முன் உந்தி மேலெழு வதற்கு உதவும் வலுவான நீண்ட பலகை; springboard. உந்துபலகை யிலிருந்து எம்பி மேலெழுந்து குளத்தில் குதித்தான். உந்துவண்டி பெ. (n.) உந்தத்தினால் இயங்கும் வண்டி; motor car. *உந்துவண்டியில் ஏறிச் சென்றான். உந்துவிசை பெ. (n.) ஒரு பொருள் முன்னோக்கிச் செல்ல அல்லது பாயத் தேவையான விரைவைத் தரும் ஆற்றல்; propulsion. 'ஏவூர்தியை விண்ணில் ஏவ உந்துவிசை உதவு கிறது.

உப்பங்கழி பெ.(n.) 1. கடலிலிருந்து பிரிந்து உவர் நீர் தேங்கியிருக்கும் நீள்குட்டை; back water lagoon. 2.உப்பளம்; salt pan.

உப்பங்காற்று பெ. (n.) கடற்காற்று; sca breeze. 'உப்பங்காற்று உடலுக்கு ஆகாது.

உப்பங்கோரை பெ. (n.) உவர் நிலத்தில் முளைப்பதான கைப்புக் கோரை; a bitter sedge that grown only by the side of salt marshes.

உப்பளம் பெ. (n.) பாத்திகளில் தேக்கப்பட்ட கடல்நீர் ஆவியாகி உப்புப் படிவதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட இடம்; salt pan. உப்பமைத்தல் வி. (v.) உப்பு விளைத்தல்; to produce salt. 'உப்பளத்தில் உப்பமைத்தார்கள்.