பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உப்பமைப்போர் பெ. (n.) உப்பு விளை விக்கும் நெய்தல் நில மக்கள்; salt manufactures, dwellers in maritime tracts, உப்பர் பெ.(n) உப்பமைப்போர் பார்க்க. உப்பரிகை பெ. (n.) அரண்மனை

போன்றவற்றின் மேல் மாடம்; balcony in a palace.

உப்பல் பெ. (n.) ஊதிப் பருத்தல்; distension, flatulence. 'ஆள் உப்பலாகி யிருக்கிறான்'.

உப்பளவர் பெ. (n.) உப்பு விளை விப்போர்; salt maker.

உப்பளறு பெ. (n.) களிமண்ணும் உப்புமணலும் கலந்த களர்நிலம்; cil containing clay and sand impregnated with alkaline matters generally found along the coasts. 'உப்பளறில் விளையாடாதே என்று அதட்டினார். உப்பறுகு பெ. (n.) உவர்நிலத்துள்ள ஒருவகை அறுகம்புல்;

species of Bermuda - grass growing in maritime tracts.

உப்பனாறு பெ. (n.) கடலிலிருந்து எதிர்த்துப் பெருகிய உவர்நீருள்ள ஆறு; back water, regarded as a river of salt water. 'உப்பனாற்று நீரால்தாகம் தணியாது.

உப்புசம் பெ. (n.) வீக்கம்; swelling as of the

abdomen; flatulence, 'வயிறு உப்புசமா யிருக்கிறது'.

உப்பாரக்காரன் பெ. (n.) சுண்ணாம்பு பூசும் வேலைக்காரன்; one who plasters a wall, who rubs mortar. வீட்டுக்கு வெள்ளையடிக்க உப்பார்க் காரனை அழைத்துவா'.

உப்பாறு பெ. (n.) காட்டாறு; country stream usually dry except in the rainy

season.

உப்பிட்டவர் பெ. (n.) உணவனித்தவர்; one who affered food, help. 'உப்பிட்டவரை உள்ளளவும் நினை(பழ).

உப்புக்கறி

63

உப்பில்லாப் பேச்சு பெ. (n.) பயனற்ற உரையாடல்; insipid discourse. 'உப் பில்லாப் பேச்சால் எந்த தன்மையும் விளையப் போவதில்லை'.

உப்பு பெ. (n.) I.கடல் நீரை ஆவியாக்கி உணக்கிய, படிக வடிவ, உவர்ப்புச் சுவையுடைய வெண் சிறுகல்; salt; alkali. 2.உப்பின் சுவை; கைப்பு; saltiness. 'குழம்பு உப்பாயிருக்கிறது' 3. அமிலமும் காரமும் சேர்ந்து ஏற்படும் மாற்றத்தால் கிடைக்கும் படிக வடிவப் பொருள்; chemical salt. உப்புதல் வி. (v.) 1.ஊதிப் பெருத்தல்; be puffed up; bloat. 'ஆள் இப்போது உப்பியிருக்கிறான்'. 2. வீங்குதல்; swell. அழுது அழுது அவள் கண்கள் உப்பியது.

உப்புக்கடலை பெ. (n.) உப்பும் மஞ்சட் பொடியும் துவி வறுத்த கடலை; parched bengal gram seasoned with salt and turmeric powder.

உப்புக்கண்டம் பெ. (n.) உப்பூட்டிக் காய

வைத்த இறைச்சித் துண்டு அல்லது மீன்; piccc of salted meat or salt fish. உப்புக்கரித்தல் வி. (v.) உவர்ப்பு மிகுதல்;

to have an intensely saline taste. 'தண்ணீர் உப்புக்கரிக்கிறது'. உப்புக்கல் பெ. (n.) I.உப்புத்துண்டு; lump or pinch of salt. 'குழம்புக்கு இரண்டு உப்புக்கல் போடு. 2. ஒருவகைக் கடற்கல்; fine grained grit stone formed by the induration of the upper surface of the sea bed.

உப்புக்கழி பெ. (n.) உப்பங்கழி பார்க்க. உப்புக்கறி பெ. (n.) உப்பிட்டு உணக்கிய கிழங்கு அல்லது பழத்துண்டுகளின் வறுவல்; curry of fruits or tubers salted and fried. 'உப்புக்கறி சுவையாக இருந்தது'.