பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

உப்புக்காகிதம்

உப்புக்காகிதம் பெ. (n.) உப்புத்தாள் பார்க்க.

உப்புக்காற்று பெ. (n.) கடலிலிருந்து வீசும்

உப்புத்தன்மை நிறைந்த காற்று; salty sea breeze. 'உப்புக்காற்று உடம்புக்கு ஆகாது என்றார்.

உப்புக்கீரை பெ. (n.) ஒருவகைக் கீரை; common Indian saltwort.

உப்புக்கோடு பெ. (n.) சதுரக்கோடு கிழித்து ஆடும் கிளித்தட்டு விளை யாட்டு; a game consisting of running through a diagram of squares marked on the ground. அவன் உப்புக்கோடு ஆட்டத்தில் வல்லவன்.

உப்புகை பெ. (n.) பருத்தல்; வீங்குதல்; enlarging; swelling.

உப்புச் சத்தியாகிரகம் பெ. (n.) இந்தியாவில் உருவாக்கப்பட்ட உப்புக்கு ஆங்கிலேயே அரசு வரி சுமத்தியதை எதிர்த்து தேசத் தந்தை காந்தி தலைமையில் நடத்தப்பட்ட போராட்டம்; salt satyagraha. உப்புச்சப்பு பெ. (n.) I. சுவை; taste. சாப்பாட்டில் உப்புச்சப்பில்லை'. 2.ஆர்வம்(சுவாரஸ்யம்); Interest.

ஆட்டம் உப்புச்சப்பில்லாமல் முடிந்தது.

உப்புத்தாள் பெ. (n.) மணல் போன்றதுகள் ஒட்டப்பட்டு தேய்ப்பதற்கான தாள்; sand paper, emary sheet.

உப்புப்புளி பெ. (n.) குடும்பம் நடத்து வதற்குத் தேவையான சிறு சிறு தேவைகள்; small needs of a house hold; bare necessities.

உப்புப்படுதல் வி. (v.) 1. உப்பு விளைதல்; to form as salt by natural process. 2.உப்புத்தன்மையடைதல்; to become

saline.

உப்புப்பண்டம் பெ. (n.) உப்புச்சுவையுள்ள உணவுப் பண்டம்; salted food. உப்புப் பயிர் பெ. (n.) உப்பளங்களின் பாத்திகளில் கடல் நீரைப் பாய்ச்சு வதால் விளைந்த உப்பு; crop of salt. உப்புப் பற்றுதல் வி. (v.) உவர் பிடித்தல்;

to become saline, as land.

உப்புப்பாத்தி பெ. (n.) உப்பு விளைதற் கிடமான பாத்தி; beds in salt pans. உப்புப் பாத்தியில் செய்தார்கள்.

வேலை

உப்புப் பார்த்தல் வி. (v.) சுவை பார்த்தல்; to try seasoning, as of curry by the taste. அம்மா குழம்பை உப்புப் பார்க்கத் தந்தார்.

உப்புப்புல் பெ. (n.) உவர் நிலத்துண் டாகும் புல்; grass growing on saline soils.

உப்புச்சீடை பெ. (n.) உப்புச்சுவையுள்ள உப்புப்பூத்தல் வி. (v.) 1. வியர்வை காய்ந்து

சீடைப் பணிகாரம்; small balls of pastry fried and salted. உப்புத்தண்ணீர் பெ. (n.) I.உப்புநீர்; கடல்நீர் போல் உவர்ப்பான நீர்; salt, brackish water. 2. உப்பிட்டுக்கலக்கிய நீர்; water in which salt is dissolved. உப்புத்தள்ளல் பெ. (n.) பத்தியத்தில் உப்பு தீக்கல்; theremoval of the salt from diet, de cleridin. 'உப்புத் தள்ளிய உணவு

சுவைக்கவில்லை'.

தோலின் மீதும், ஆடை மீதும் உப்புப் படிந்து வெள்ளை வெள்ளையாகக் காணப்படுதல்; have white patches of salt on the skin or dress when sweat dries

up. சட்டை உப்புப் பூத்திருக்கு ' 2.உப்புக் காற்றால் அரிக்கப்படுதல்; be corroded by brackish sea breeze. கடற்கரையில் நின்றிருந்த பூநாரை யின் உடல் உப்புப் பூத்திருந்தது'. உப்புப்பொரிதல் வி. (v.) உப்புப்பூத்தல்

பார்க்க.