பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

உய்த்தறிதல்

உயர்த்தி பெ. (n.) மேன்மை; excellence; superiority.

உய்த்தறிதல் வி. (v) உய்த்துணர்தல் உயர்த்திப் பிடித்தல் வி. (v.) முகமை

பார்க்க.

உய்த்துணர்தல் வி. (v.) ஆராய்ந்தறிதல்; to know by careful investigation. திருக்குறளை ஆழ்ந்து படித்தால் வள்ளுவரின் மொழியாளுமையை உய்த்துணரலாம்'.

உய்தல் வி. (v.) தீவினையிலிருந்து நீங்கி நற்கதியடைதல்; be redeemed, attain freedom (from evil).

உய்வித்தல் வி. (v.) உய்வடையச் செய்தல்; redeem. 'நாட்டை உய்விக்க வந்த தலைவர்.

உய்விடம் பெ.(n.) பிழைக்குமிடம்; asylum place of refuge, shelter. ஏதிலிகள் உய்விடம் தேடி அலைந்தனர்.

உய்வு பெ. (n.) தீவினையிலிருந்து நீங்கிப் பெறும் நற்கதி, மீட்சி; deliverance (from evil), redemption.

உயர் பெ. (n.) I. மேல்; higher (in grades or in a hierarchy); 'உயரதிகாரி'. 2.(தரத்தைக் குறிக்கையில்) சிறந்த; high (in quality; grade). உயர்தரப் பொருள்கள்.

உயர்கல்வி பெ. (n.) மேற்படிப்பு; higher education. 'உயர்கல்வித்துறை'.

உயர் குருதியழுத்தம் பெ. (n.) இயல்பான அளவுக்கு அதிகமாக இருக்கும் குருதியழுத்தம்; குருதிக் கொதிப்பு; high blood pressure.

உயர்ச்சி பெ. (n.) 1. உயரம்; height, elevation, altitude. 2. GO GOT GOLD; excellence, superiority, moral worth, valuable trait.

உயர்சொல் பெ. (n.) உயர்த்திக் கூறுஞ் சொல்; honorific, expression, term of respect. 'உயர்சொல் ஊக்கம் தரும்'

(முக்கியத்துவம்) தருதல்; give importance. உழவை உயர்த்திப் பிடித்தால் நாடு முன்னேறும்'. உயர்த்திப் பேசுதல் வி. (v.) I. புகழ்ந்து பேசுதல்; to speak highly, of a person or a thing. 'பரிசு பெற்ற மாணவரை ஆசிரியர் உயர்த்திப் பேசினார்'. 2.குரலையோங்கிப் பேசுதல்; toraise the voice and speak. அப்பாவின் முன் யாரும் குரலை உயர்த்திப் பேச மாட்டார்கள்.

உயர்த்துதல் வி. (v.) I. கீழ்நிலை யிலிருந்து மேல் நிலைக்குக் கொண்டு வருதல்; raise (one's head, am, etc.,), lift up. 'தலையை உயர்த்தினான்'. 2.உயரத்திற்குக் கொண்டு வருதல்; (of level) cause to rise. 'மேடையை உயர்த்திக் கட்டினார்கள்'. 3. அளவு, விலை, மதிப்பு முதலியவற்றை அதிகரித்தல்; increase, raise. 3. புகழ்தல், பாராட்டுதல்; praise, appreciate. தொண்டர்கள் தம் கட்சித் தலைவரை உயர்த்திப் பேசினார்கள். உயர்தரம் பெ. (n.) பட்டப்படிப்பில் சேர்வதற்கான அடிப்படைத் தகுதி யாக அமையும் மேல்நிலைத் தேர்வு; higher secondary examination; general certificate of examination (advanced level). 'உயர்தரம் முதலாமாண்டு படிக்கிறாள்.

உயர்தல் வி. (v.) 1. மேல்நோக்கி எழும்புதல்; rise, go up (from a lower position). 'ஏவூர்தி வான்நோக்கி உயர்ந்து சென்றது . 2. அளவு, விலை, மதிப்பு முதலியன அதிகரித்தல்; கூடுதல்; increase, rise.

உயர்திணை பெ. (n.) மக்களையும் தெய்வங்களையும் உள்ளடக்கிய பெயர்ச்சொல் பகுப்பு; class of nouns compressing humans and celestial beings.