பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்தொழில்நுட்பம் பெ. (n.) மின்னணு வியல், கணிப்பொறியியல் ஆகிய வற்றைப் பயன்படுத்தும் தொழில் நுட்பம்;

high-tech உயர் தொழில் நுட்பக் கருவிகள்.

உயர்ந்த வி.எ. (adv.) I. உயரமான; high, tall. 'உயர்ந்த கோபுரம்'. 2. தன்மை, தரம், குணம் போன்றவற்றில் சிறந்த, நல்ல; high (quality) உயர்ந்த குணமுள்ளவர்.

உயர்ந்தவன் பெ. (n.) I. உயரமானவன்; tall man. 2. சிறந்தவன்; man of rank, man of high character.

உயர்ந்தபட்சம் பெ. (n.) அதிகளவு ; maximum.

உயர்ந்தோங்குதல் வி. (v.) சிறப்பான

நிலையை அடைதல்; attain ahigh level;

flourish.

உயர்ந்தோர் பெ. (n.) பண்பில், கல்வியில் பெரியோர்; the great; the leamed, the exalted, as in piety, in virture, or in

austerities.

உயர்நிலை பெ.(n.) I. மேலான நிலை;

high; higher. உயர்நிலை ஆய்வு'. 2.மேலான பதவி; high position. உயர்நிலைக் கல்வி பெ. (n.) பத்தாம் வகுப்பு வரை பயிலுங் கல்வி; high school education.

உயர்நிலைப் பள்ளி பெ. (n.) பத்தாம்

வகுப்பு வரை உள்ள பள்ளிக்கூடம்; high school (offering instruction up to the 10th standard).

உயர்நீதிமன்றம் பெ. (n.) மாநிலத் திற்கான தலைமை அறமன்றம்; high court. 'உயர்நீதிமன்ற ஆணையை மாநில அரசு நிறைவேற்றியது'. உயர்மட்டக்குழு பெ. (n.) குறிப்பிட்ட சிக்கல்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் பொருட்டு அரசால் அமர்த்தப்படும் குழு; high level committee (constituted by the

உயவு எண்ணெய்

67

govemment to study and report on specified issues).

உயர்வு பெ.(n.) 1. அதிகரிப்பு, கூடுதல்; rise, increase. 'விலைவாசி உயர்வு மக்களை வாட்டுகிறது. 2. பதவியில் குறிப்பிட்ட நிலையைவிட அடுத்த மேல்நிலை; promotion (to a higher post). பதவி உயர்வு பெற்றார். 3.சிறப்பு; being high or superior. 'மகன் அம்மாவைப் பற்றி உயர்வாகப் பேசினார்.

உயர்வுமனப்பான்மை பெ. (n.) மற்றவர் களைவிட தான் எல்லா வகையிலும் உயர்வு என்ற மனப்போக்கு; superiority complex.

உயரம் பெ. (n.) 1.அடிப்பகுதியிலிருந்து மேல்பகுதி வரை உள்ள அளவு; height. உயரமான கோபுரம்'. 2. அதிக உயரம்; being tall; being high. 'ஆள் உயரமாக இருக்கிறார். 3. உயர்ந்த நிலை, உச்சம்; (of fame, achievement, etc.,) height, peak, pinnacle. 'பாவாணர் சொற்பிறப்பியல் துறையில் உயரம் தொட்டவர்.

உயரம் தாண்டுதல் பெ. (n.) ஓடிவந்து

அதிக உயரம் தாண்டும் தடகளப் போட்டி; highjump.

உயரழுத்த மின்சாரம் பெ. (n.) தொழிற் சாலைகளில் பெரிய எந்திரங்களை இயக்கத் தேவையான ஆற்றல் வாய்ந்த மின்சாரம்; high tension power. உயரிய பெ.எ.(adj.) உயர்ந்த, சிறந்த;noble.

உயரிய எண்ணம் உடையவர்.

உயரே வி.எ. (adv.) மேலே; மேல் நோக்கி; above. ' உயரே செல்லச் செல்ல காற்றின் அழுத்தம் படிப்படியாகக் குறையும்.

உயவு எண்ணெய் பெ. (n.) எந்திர

பாகங்கள் ஒன்றோடொன்று உரா