பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

உயிர்

யாமல் சீராக இயங்குவதற்காக இடப்படும் எண்ணெய், பசைத் தன்மையும் குழகுழப்பும் நிறைந்த பொருள்; lubricant.

உயிர் பெ. (n.) 1. உயிருள்ளவற்றின் அனைத்து இயக்கங்களுக்கும் அடிப் படையாக இருக்கும் ஆற்றல்; life, sign of life. 2.உயிரோடு இருந்து இனப்பெருக்கம் செய்யும் உயிரி; living being. 3. கருப்பையில் இருக்கும் கரு; foetus. பத்து மாதம் சுமந்த உயிர் பாதுகாப்பாய்ப் பிறந்தது. 4. அதிக விருப்பம்; intense liking. 'என்மேல் அம்மா உயிரையே வைத்திருக் கிறார். 5. மிக நெருக்கம்; being very close. உயிர்த் தோழன். 6. உயிரெழுத்து; vowel. 'உயிர் பன்னிரண்டு'. உயிர் ஊதுதல் வி. (V) குழந்தையின் நெற்றியில் ஊதுதல்; to blow the

forehead of infants.

உயிர் இயற்பியல் பெ. (n.) இயற்பியல் நெறிமுறைகளைப் பயன்படுத்தி உயிரியலை ஆராயும் துறை; biophysics.

உயிர்க்கட்டை பெ. (n.) உடல்; body. உயிர்க்கணம் பெ. (n.) உயிரெழுத்துகளின் கூட்டம்; vowels. 'உயிர்க்கணம் பன்னிரண்டு .

உயிர்க்கப்பண்ணல் பெ. (n.) உயிர் பிழைக்கச் செய்தல்; to reanimate; to bring to life. 'உரிய நேரத்தில் முதலுதவி செய்து உயிர்க்கப்

பண்ணினார்.

உயிர்க்காப்பாற்றி பெ. (n.) உயிரைக் காக்கும் மருந்து; elixir of life. உயிர்க்கொலை பெ. (n.) 1. உயிரை வாங்குதல்; taking of animal or human life. 'அவன் உயிர்க்கொலைக்கு அஞ்சாதவன். 2. துன்புறுத்திக் கொல்லல்; taking of life by gradual dismemberment of limbs and organs.

உயிர்க்கோழி பெ. (n.) இறைச்சிக்காக உயிரோடு விற்கப்படும் கோழி; live chicken.

உயிர்காத்தல் வி. (v.) பேரிடரிலிருந்து காத்தல்; வாழ வைத்தல்; save (one's) life.'உயிர்காத்த நட்பு'.

உயிர்கொடுத்தல் வி. (v.) அழிந்துவிடும் நிலையிலுள்ள ஒன்றுக்குப் புத்துயிர் கொடுத்தல்; உயிர்ப்பித்தல்; revive; save from extinction. 'அழிந்துவரும் நாட்டுப்புறக் கலைகளுக்கு உயிர் கொடுக்க வேண்டும்.

நலம்

உயிர்குடித்தல் வி. (v.) உயிரைப் போக்குதல்; to devour, life, said of blood thirsty demons and malevolent deities. உயிர்சத்து பெ. (n.) உடல் வளர்ச்சி, உடல் ஆகியவற்றுக்கு இன்றி யமையாததும், சிலவகை உணவுப் பொருள்களில் காணப்படுவதுமான பல வகை ஊட்டப் பொருள்; vitamin. உயிர்ச்சத்து நிறைந்த உணவு. உயிர்ச்சேதம் பெ. (n.) நேர்ச்சை, இயற்கைப் பேரிடர் ஆகியவற்றால் ஏற்படும் இறப்பு; loss of life. வெள்ளத்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது.

உயிர்த்தல் வி. (v.) கருவாக உருவாதல்; உயிர் தோற்றம் எடுத்தல்; (of life) evolve; emerge. 'மாந்தன் உயிர்த்திராத காலம் அது '.

உயிர்த்தறுவாய் பெ. (n.) சிக்கலானநேரம்; great emergency, critical moment, extreme danger.

உயிர்த்தன்மை பெ. (n.) உயிரோடுகூடிய தன்மை ; living date. உயிர்த்துடிப்பு பெ. (n.) 1. உடலில் உயிரிருப்பதை உணர்த்தும் அசைவு, நெஞ்சாங்குலைத் (இதயத்) துடிப்பு; pulse of life; pulsation; throb. அடிபட்ட யானையின் உயிர்த் துடிப்பைப் பார்த்தனர்.2. ஒன்றைச் செய்து