பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிக்க வேண்டும் என்ற கட்டுக் கடங்காத ஆர்வம்; liveliness zest. அவன் உயிர்த் இளைஞன்.

துடிப்புள்ள

உயிர்த்துணை பெ. (n.) 1. இக்கட்டான நேரத்தில் உதவுபவர்; friend in need. 2.உயிர்த் தோழன், தோழி; intimate friend, dear as life. 'உயிர்த்துணையான தோழன் . 3. மனைவி; wife. 'என் வாழ்க்கை உயிர்த்துணையால்

சிறப்படைந்தேன்'. உயிர்த்தெழுதல் வி. (v.) 1. மயக்க மடைந்தவர் தெளிவு பெற்று எழுதல்; to be revived, restored to life. 2. செயல் படத் தொடங்குதல்; get awakened; become alive, quicken. உறங்கிக் கிடந்த உணர்வுகள் உயிர்த்தெழுந்தன'. 3.மீண்டும் உயிர்பெற்றெழுதல்; to

rise from the dead. 'இயேசு மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். உயிர்த்தெழுந்த திருநாள் பெ. (n.) இயேசு உயிர்த்தெழுந்ததன் நினைவாகக் கொண்டாடப்படுகிற,

பெரிய

(புனித) வெள்ளிக்குப் பின்வரும் ஞாயிற்றுக் கிழமை; Easter (Sunday). உயிர்த்தோழன் பெ. (n.) உற்ற நண்பன்; bosom friend, inseparable companion. உயிர்த்தோழி பெ. (n.) உற்ற தோழி; woman's trusted female companion. உயிர்தப்புதல் வி. (v.) உயிர்பிழைத்தல்; escape from death; survive. 'வெள்ளத்திலிருந்து உயிர்தப்பி வந்தான். உயிர்தரித்தல் வி. (v.) உயிரோடிருத்தல்;

be alive; survive. 'எனக்காகத்தான் என் அம்மா உயிர் தரித்திருக்கிறார்'. உயிர்தரு மருந்து பெ. (n.) உயிரை நீட்டிக்கும் மருந்து; elixir of life. உயிர்தோற்றம் பெ. (n.) உயிர்களின் பிறவி; genesis of life in four classes of living organisms.

உயிர்நாடி பெ. (n.) ஏதேனும் ஒன்று நிலைப்பதற்கு அடிப்படையானது;

உயிர்ப்பித்தல்

69

lifeblood of something; life force; vital force. 'அன்பே உலகத்தின் உயிர்நாடி'. உயிர்நிலை பெ. (n.) உயிர்நாடி; vital element; the most essential; the very

essence.

உயிர்நிலைப்புண் பெ. (n.) உடம்பின் உயிர்நிலைப் பாகங்களிலேற்படும் புண்; wound, injury or sore on a vital part of the body.

உயிர்நூல் பெ. (n.) உயிரைப் பேணும்

முறையைத் தழுவிய நூல்; a treatise on protection of life; science of health. உயிர்ப்பயிர்கள் பெ. (n.) எல்லாவகை உயிர்கள்; all lives in the animalkingdom; all things with life.

உயிர்ப்பலி பெ. (n.) உயிரையே கொடுக்

கும் காணிக்கை; sacrifice of life. உயிர்ப்பழி பெ. (n.) கொலை செய்த

வனைத் தொடரும் பழி; guilt of murder, vengeance divine or human of the foul deed of murder pursuing the murderer to death.

உயிர்ப்பற்று பெ.(n.) உயிரின் தொடர்பு; desire for life.

உயிர்ப்பன Gu. (n.) மூச்சுடைய விலங்குகள்; breathing animals. உயிர்ப்பிச்சை பெ. (n.) உயிர் போகும் நிலையில் காப்பாற்றுதல்; உயிரளிக்கை; gift of life, saving one's life.'உயிர்ப்பிச்சை அளித்தார். உயிர்ப்பித்தல் வி. (v.) I. பிழைக்கச் செய்தல்; reviving, restoring. 2. உயிர் கொடுத்தல்; giving life. 3. இறந் தோரை எழுப்புதல்; animating persons apparently dead. 4. வழக்கற்றதை மீண்டும் வழக்குக்குக் கொண்டு வருதல்; புதுப்பித்தல்; resurrect (a custom, etc.,) revive (an old word, etc.,); revivify. அழிவின் விளிம்பிலிருந்த மொழியை உயிர்ப்பித்தனர்.