பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

உயிர்ப்பிப்பு

உயிர்ப்பிப்பு பெ. (n.) பிழைக்கச் செய்தல்; reviving life.

உயிர்ப்பு பெ.(n.) உயிர் இருப்பதை வெளிப்படுத்தும் மூச்சு, இயக்கம் முதலியன ; signs of life (such as breath, movement, etc.,) life. ஆட்டின் உயிர்ப்பு அடங்கியது'.

உயிர்ப்பு ஞாயிறு பெ. (n.) உயிர்த்தெழுந்த

திருநாள் பார்க்க.

உயிர்ப்புத் திருநாள் பெ. (n.) உயிர்த் தெழுந்த திருநாள் பார்க்க.

உயிர்ப்பு வீங்குதல் வி. (v.) பெருமூச்சு விடுதல்; to heave a deep sigh; fetch a deep breath. அடுத்தவர் வளர்ச்சியைக் கண்டு உயிர்ப்பு வீங்கினான்.

உயிர்ப்புனல் பெ. (n.) குருதி; blood, lit. life

fluid.

உயிர்

உயிர் பிழைத்தல் வி. (v.) சாவிலிருந்து தப்பித்தல்; escape certain death; survive (something). ஆழிப் பேரலையின் தாக்குதலிருந்து சிலரே பிழைத்தார்கள். உயிர்பெறுதல் வி. (V.) உயிரோட்டம் பெறுதல்; come to life. 'கம்பனின் சொல்நடையால் காட்சிகள் உயிர் பெறும்'.

உயிர்போகுதல் வி. (v.) 1. சாதல்; to expire, die. 2. மிகுந்த வலி ஏற்படுதல்; (nearly) die (of pain, etc.,). வலி உயிர் போகிறது.

உயிர் மருந்து பெ. (n.) I. வாழ்நாளை நீட்டிக்கும் மருந்து; elixir of life. 2.சோறு; food, the sustainer of life; boiled rice.

உயிர்மெய் பெ. (n.) மெய்யெழுத்து முன்னும்,உயிரெழுத்து பின்னுமாக இணைந்து நின்று ஒலிக்கும் ஒலி; the combination of a consonant and a vowel

sound;

consonant - vowel. 'க,ச,த,ப். உயிர்வாங்குதல் வி. (v.) I. கொல்லல்; to kill.2. தொல்லை தருதல்; giving troubles. 'பணம் கேட்டு என் உயிரை வாங்குகிறான்.

உயிர்வாழ்க்கை பெ. (n.) உயிர் வாழ்தல்;

living.

உயிர்வாழ்தல் வி. (v.) உயிரோடிருத்தல்; live; keep alive; survive, exist. நீரை மட்டும் குடித்தே உயிர்வாழ்கிறான். உயிர்விடுதல் வி. (v.) I. உயிரை இழத்தல்; இறத்தல்; lay down one's life; die (for a cause). போரில் உயிர்விட்ட வீரனுக்காக நடுகல் வைப்பது தமிழர் மரபு.2. குறிப்பிட்ட ஒன்றிற் காகவே வாழ்க்கையை அமைத்துக் கொள்ளல்; be desperate for something. 'பதவி பதவி என்று உயிர் விடுகிறார். உயிர்வேதிப்பொருள் பெ. (n.) உயிரினங் களின் உடலில் இருக்கும் அல்லது உருவாகும் வேதிப்பொருள்; biochemical substance.

உயிர் வேதியியல் பெ. (n.) உயிர் வாழ்வன வற்றில் இருக்கும் பொருள்களின் வேதியியல் தன்மைகளை ஆராயும் அறிவியல் துறை; biochemistry. உயிர்வேலி பெ. (n.) கழி, கம்பி போன்ற வற்றைப் பயன்படுத்தாமல் அடர்த்தி யாக வளரும் சிறு முள்மரங்களை நெருக்கமாக நட்டு உருவாக்கும் வேலி; biofence. 'காட்டாமணக்கு, ஆடாதொடை போன்றவற்றை உயிர்வேலியாக நடலாம்.

உயிர்மாய்த்தல் வி. (v.) கொல்லல்; to உயிர்வைத்தல் வி. (v.) பற்று வைத்

deprive of life; to kill.

உயிர்மாற்றல் பெ. (n.) I. கொலை

செய்தல்; murdering. 2. தற்கொலை; suicide.

திருத்தல்; to have more affection, regard. அம்மா என்மேல்

வைத்திருக்கிறார்.

உயிரே