பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரடங்குதல் வி. (v.) 1. மூச்சு ஓடுங் குதல்; to be in a state of unconsciousness in a swoon, to have one's animation suspended. 2. இறத்தல் ; to die. அடிபட்ட மானின் உயிரடங்கி விட்டது.

உயிரடைதல் வி. (v.) மயக்கந் தெளிதல்; to revive, to be reanimated. உயிரணு பெ. (n.) உயிரினங்களின் இயக்கத்திற்கும் உடல் அமைப் பிற்கும் அடிப்படையான, கண் ணுக்குப் புலப்படாத மிக நுண்ணிய உயிரி; cell.

உயிரவர் பெ. (n.) உயிர் வாழ்கின்றவர்; living persons.

உயிரளபு பெ. (n.) உயிரளபெடை பார்க்க. உயிரளபெடை பெ. (n.) தனக்குரிய மாத்திரையிலிருந்து மிக்கொலிக்கும் உயிரெழுத்து; Vowel which sounds with more than its normal quantity, which fact is indicated in writing by placing a short vowel of the class after the long vowel, as in.ஓஒதல்,கொடுப்பதூஉம்'. உயிரி பெ. (n.) 1.உயிரினம்; living creature; organism, life form. 'நீர் வாழ் உயிரி' 2. நுண்ணுயிர்; micro organism. உலகில் முதலில் தோன்றிய உயிரி அமீபா'. உயிரி ஆய்தம் பெ. (n.) போரில் பேரழிவை ஏற்படுத்துவதற்குப் பயன்படுத்தும் நச்சுயிரி, தீநுண்மி (பாக்டீரியா); biological weapon. இப்போது நாடுகள் தீநுண்மிப் போரில் ஈடுகின்றன'.

உயிரி பூச்சிக்கொல்லி பெ. (n.) வேதியியல் பொருள்களின் கலப்பின்றி நிலைத் திணை (தாவரங்) களிலிருந்து உருவாக் கப்படும் இயற்கைப் பூச்சிக்கொல்லி மருந்து; organic pesticide. 'வேம்பு உயிரி பூச்சிகொல்லியாகப் பயன்படுகிறது'. உயிரியல் பெ. (n.) உயிர்வாழ்வன பற்றிய அறிவியல்; biology.

உயிரூட்டுதல்

71

உயிரியல் பூங்கா பெ. (n.) விலங்குகளும் பறவைகளும் தம்முடைய இயற்கை யான சூழலில் வாழ்வது போலவே இருக்கும் வகையில் பெரிய நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட விலங்குக் காட்சிசாலை; zoological garden; zoo.

உயிரிழத்தல் வி. (v.) இயற்கையான முறையில்லாமல் நேர்ச்சி, நோய் போன்றவற்றால் இறத்தல்; lose one's life (in an accident, war, etc.,) die (in an unnatural manner) . 'சாலை நேர்ச்சி யால் உயிரிழப்பவர்களின் எண் ணிக்கை அதிகம்'.

உயிரினம் பெ. (n.) 1. உயிர் வகைகள்;

living beings. 2. உயிரெழுத்துகள்; vowels.

உயிருக்குயிராக வி.எ. (adv.) மிகுந்த அன்போடு; intimately, very dearly. *உயிருக்குயிராகப் பழகிய நண்பர். உயிருண்ணுதல் வி. (v.) 1. உயிரைப் போக்குதல்; to devour life kill. 2. தன்னுணர்வு இழத்தல்; to subjugate aperson's will.

உயிருதவி பெ. (n.) I. இக்கட்டில் உதவுகை; aid when life is in danger. படிக்க பணமில்லாதபோது அவர் தான் உயிருதவி செய்தார். 2.உயிர் கொடுத்து உதவுகை; aid by sacrificing one's life. 'படைவீரர்கள் உயிருதவி செய்து பேரிடரிலிருந்து காப்பாற்றுகிறார்கள்.

உயிருரம் பெ.(n.) வளிமண்டலத்தில் காணப்படும் தழையூட்டத்தை (தழைச்சத்து) ஈர்த்துப் பயிர்களுக்குப் பயன்படுமாறு மாற்றிக் கொடுக்கும் நுண்ணுயிரிகள்; biofertilizers. உயிரூட்டுதல் வி. (v.) புது விரைவு அல்லது எழுச்சி தருதல்; enliven, resuscitate, give life to. 'படத்துக்கு