பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

உயிரெடுத்தல்

உயிரூட்டுவதாய் அமைந்துள்ளது திரைக்கதை'.

உயிரெடுத்தல் வி. (v.) I.உயிரை வாங்கிவிடுதல்; to take away life. 2. தொல்லை தருதல்; to give great trouble. காசு கேட்டு உயிரெடுக் கிறான்.

உயிரெழுத்து பெ. (n.) I. தனித்து இயங்கக் கூடிய உயிர்; Vowel. 2. உயிரொலியைக் குறிக்கும் வரி வடிவம்; any of the letters representing a vowel. உயிரைக் கொடுத்து வி.எ (adv.) மிகுந்த

ஈடுபாட்டுடன் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து; giving heart and soul; whole heartedly. 'புத்தகம் செம்மையாக வர வேண்டும் என்று உயிரைக் கொடுத்து வேலை செய்தோம்.

முழு

உயிரைவிட்டு வி.எ. (adv.) ஆற்றலையும் பயன்படுத்தி, கடுமை யாக உழைத்து; take a toll oflife. 'இங்கு உயிரைவிட்டு வேலை செய்தாலும் நல்ல பெயர் கிடைக்காது என்று புலம்பினான்.

உயிரைவிடுதல் வி. (v.) 1. மிகுந்த அன்பு காட்டுதல்; be much attached to someone. அம்மா அம்மா என்று அவன் உயிரை விடுவான்'. 2. ஒருவர் தான் மிகவும் முகாமையானது என்று கருதும் ஒன்றுக்காக வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்தல்; die for, give oneself up (to something). கட்சி கட்சி என்று உயிரைவிடுகிறான்'. உயிரொழித்தல் வி. (v) கொல்லல்; to kill, murder.

உயிரொளித்தல் வி. (v.) உயிர்க்கு இக்கட்டு வந்தது போல் காட்டுதல்; to feign great weariness or sickness, in order to gain an object.

உயிரொளித்த கள்ளன் பெ. (n.) தன் செல்வ நிலையை மறைத்துப் பிறரை இரந்து GILDIT UNICOITOT; cringing deceiver who, when he is really rich and strong, pretends the contrary state.

உயிரோட்டம் பெ. (n.) கதை, ஓவியம் முதலியவற்றில் உணர்ச்சி தரும் கூறு; verve; vitality; vigour. 'உயிரோட்ட மானசிலை.

உயிரோடிருத்தல் வி. (v.) பிழைத் திருத்தல்; to survive.

உர்ரென்று வி.எ. (adv.) முறைப்பாக, இயல்புக்கு மாறாக; unfriendly, sullen. ஏன் முகத்தை உர்ரென்று வைத்திருக் கிறாய்?

உரக்க வி.எ. (adv.) குரலோங்க; loudly,

distinctly. 'உரக்கப் பேசினான்'. உரங்குத்துதல் வி. (v.) மரத்தைச் சுற்றி உரமண் கொட்டிக் கெட்டிப்படுத்தல்; to pound and harden the earth around trees newly set. 'வேப்பங்கன்றுக்கு உரங்குத்த வேண்டும்.

உரங்கொள்ளு-தல் வி. (v.) 1. கடுமை யாதல்; to gain force, below strong, as the wind; to become boisterous as the sea; to rage, as fever. 'காய்ச்சல் உரங்கொண்டு காய்கிறது. 2. கடின மாதல்; to be hardened, obdurate. நெஞ்சுரங் கொண்டவன்'.

உரச்சாக்கு பெ. (n.) செயற்கை இழை களைக் கொண்டு செய்யப்படும் (பொதுவாக உரத்தைக் கட்டப் பயன்படும்) சாக்கு; cheap sack made of synthetic fibre (mostly for packing chemical fertilizers). 'உரச்சாக்கில் செய்த பை.

உரசல் பெ. (n.) விட்டுக் கொடுக்காத தால் ஏற்படும் சிறு சச்சரவு; மனத் தாங்கல்; friction. மேலதிகாரியுடன் உரசல் போக்குடன் நடக்காதே என்று அறிவுறுத்தினார்.