பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரசுதல் வி. (v.) 1. உராய்தல்; rub (against something or one with another). மிதிவண்டியின் பின் சக்கரம் உரசுவதால் ஓட்ட கடினமாயிருக் கிறது. 2.ஒன்றை ஒன்றின்மேல் தேய்த்தல்; rub (something on something); strike. 'பொன்னை உரசி பார்த்தார்.

உரஞ்சுதல் வி. (v.) 1. துடைத்தல்; to rub.

2. தேய்த்தல்; to scrape.

உரஞ்செய்தல் வி. (v.) I. உறுதி

கொள்ளுதல்; to take effect; to be forceful, as in an argument. அவர் எடுத்த செயலில் உரஞ்செய்ய வில்லை. 2. வலிமையுறுதல்; to grow strong.

உரஞ்சொல்லுதல் வி. (v.) 1. உறுதி கூறுதல்; to encourage. 2. துணையாக நிற்றல்; அருகில் இருத்தல்; to support, to back up.

உரட்டுக்கை பெ. (n.) இடக்கை; left hand. உரத்த பெ.எ. (adj.) ஒலி மிகுந்த; loud. அவர்உரத்த குரலில் பாடினார். உரத்த சிந்தனை பெ. (n.) மனத்தில் தோன்றும் எண்ணம், கருத்து ஆகியவற்றை அப்படியே வெளிப் படுத்துதல்; the act of thinking aloud. உரத்து வி.எ. (adv.) உரக்க பார்க்க. உரநோய் பெ. (n.) I. மார்புநோய்; chest pain from arry cause. 2. சுளுக்கு; sprain. உரப்பல் பெ. (n.) I. வலுவான பல்; strong tooth. 2. கூச்சல் ஒலி; whoop. 3. திரட்டோசை; roaring sound. உரப்புத்தாள் பெ. (n.) உப்புத்தாள்; sand paper.

உரபடி பெ. (n.) வலிமை, திடம்; strong physique, roughness, strength, firmness ofbody. 'அவர்உரபடியான ஆள். உரபிடி பெ. (n.) உரபடி பார்க்க.

உரம் பெ.(n.) I. பயிர்களின் வளர்ச்சிக்கு இடப்படும் ஊட்டம்; anything that

உரல்

73

enriches the soil; fertilizer, manure. இயற்கை உரங்களைப் பயன் படுத்துவதே நல்லது. 2. வலிமை; ஆற்றல்; (of body) strength. சமச்சீர் உணவுகளை எடுத்துக்கொண்டால் உடல் உரம் பெறும்'. 3. எதையும் எதிர்கொள்ளத் தயங்காத, எதற்கும் கலங்காத மன வலிமை; strong will. அவர் நெஞ்சுரம் மிக்கவர்.

உரம் எடுத்தல் வி. (v.) பச்சிளம் குழந்தையைப் புடவை அல்லது வேட்டியில் போட்டு உருட்டி, கழுத்து அல்லது முதுகுப் பகுதியில் ஏற்பட்ட சுளுக்கை நீக்குதல்; roll a baby on a saree or a dhoti held by the ends to cure sprain. உரமெடுத்த பிறகுதான் குழந்தை அழுகையை நிறுத்தியது'. உரம்புகுதல் வி. (v.) விசையோடு புகுதல்;

to fierce with force.

உரம் விழுதல் வி. (v.) பச்சிளம் குழந்தை யின் கழுத்து அல்லது முதுகுப் பகுதியில் சுளுக்கு ஏற்படுதல்; (of a baby) develop sprain in the neck or back. தூக்கத் தெரியாமல் தூக்கியதால் குழந்தைக்கு உரம் விழுந்துவிட்டது'. உரமடித்தல் வி. (v) பயிர்களின் வளர்ச்

சிக்காக எரு முதலியன இடுதல்; to cart manure. அப்பா வயலில் உரமடிக்கச் சென்றிருக்கிறார்.

உரமண் பெ. (n.) 1. ஊட்டச்சத்துகள் நிறைந்த (ஊட்டமுள்ள) மண்; rich soil. 2.கெட்டியான மண்; hard ungenial soil. உரமாயிருத்தல் வி. (v.) 1. வலுவா யிருத்தல்; to be strong. 'ஆள் நல்லா உரமாயிருக்கிறார். 2. சுளுக்குக் கொண்டிருத்தல்; to be in a sprained

condition.

உரல் பெ. (n.) தவசங்களைக் குத்த அல்ல இடிக்கப் பயன்படும், கல்லால் செய்யப்பட்ட பொருள்; aheavy stone cylinder with a pit like receptacle for