பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

உரலில் துவைத்தல்

husking or pounding grains; a large stone mortar.

உரலில் துவைத்தல் பெ. (n.) உரலில் இட்டு இடித்தல்; bruising or pounding ina

mortar.

உரவண்டு பெ. (n.) ஒரு கொடிய வண்டு; a poisonous beetle.

உராய்தல் வி. (v.) இழுபட்டுத் தேய்தல்; உரசுதல்; grate. 'வண்டியின் சக்கரம் உராய்வதால் ஓட்டக் கடினமாக உள்ளது.

உராய்வு பெ. (n.) 1. தேய்மானம்; உராய்ந்து போதல்; rubbing, wearing away. 2. இரு பொருள்களின் பரப்புகள் ஒன்றையொன்று தொட்டுக் கொண் டிருக்கும் நிலையில், ஒன்றின் இயக்கத் திற்கு மற்றொரு பரப்பால் ஏற்படும் தடை; friction.

உரி பெ. (n.) உரிச்சொல் பார்க்க.

உரிக்குட்டி பெ. (n.) கடல்மீன் வகை; brownish grey suckerfish.

உரிச்சிர் பெ. (n.) மூவசைச்சீர்; foot of three asai.

உரிச்சொல் பெ. (n.) பெரும்பாலும் பெயருக்கும் வினைக்கும் அடையாக வரும் சொல்; class of words with an attributive function. கூர்வேல் என்பதில் கூர் என்பது உரிச்சொல்'. உரிசை பெ. (n.) சுவை; taste; relish; பலாப்பழம் உரிசையாக உள்ளது. உரித்தல் வி. (v.) I. பழம், கிழங்கு போன்றவற்றின் தோல், விலங்கின் தோல், மரத்தின் பட்டை ஆகிய வற்றை நீக்குதல்; பிய்த்தல்; peel; stip; rind; slough; flay (a person). 'வாழைப் பழத்தோலை உரித்துக் கொடுத்தான் 1.2. பனைமட்டை, மட்டையோடு கூடிய தேங்காய் முதலியவற்றிலிருந்து நாரைக் கிழித்தெடுத்தல்; strip fibre off

something. 'பனை மட்டையிலிருந்து நாரை உரித்துப் பெட்டி முடை கிறார்கள்.3. கோழி முதலியவற்றின் இறகுகளைப் பிடுங்குதல்; pluck (fowls while dressing); கோழியை உரித்து மஞ்சள் தடவி சமைத்தார்கள். உரித்தாக்குதல் வி. (v.) I. ஒருவருக்குத் தன்நன்றி, வாழ்த்து முதலியவற்றைச் சேரச் செய்தல்; convey (thanks, greetings, etc.,). என்னை வாழ்வில் உயர்த்திய என் பெற்றோர்க்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்' 2.அளித்தல்; dedicate. 'இந்நூலை என் பேராசிரியர்க்கு உரித்தாக்குகிறேன்.' உரித்தாகுதல் வி. (v.) நன்றி, வாழ்த்து

முதலியன ஒருவருக்குச் சேர்தல்; (of thanks, wishes, etc.,) be due to (someone). 'என் நிறைவான வாழ்த்து உங்களுக்கு உரித்தாகுக'.

உரித்தான பெ. (n.) இயல்பான, பொருத்தமான; characteristic or typical of; befitting. மலர்களுக்கே உரித்தான மணம்'.

உரித்தானவன் பெ. (n.) 1. சொத்துக் குரியவன்; proprietor, owner, heir. 2. தக்கோன்; suitable, worthy person. 3.நண்பன்; friend.

உரித்து பெ. (n.) உரிமை; right (to something). அந்த நிலத்தில் எனக்கும் உரித்து உள்ளது.

உரித்துக்காட்டுதல் வி. (v.) அறியப் படாமலிருந்த உண்மையான தோற்றம் அல்லது குணத்தை வெளிப் படுத்துதல்; reveal (the true, discreditable nature of something or someone); expose. அவன் எப்படிப்பட்டவன் என்பதை அவனது பேச்சே உரித்துக்காட்டியது. உரித்துவைத்தல் வி. (v.) தோற்றத்தில், குணத்தில் நெருங்கிய உறவினரை ஒத்திருத்தல்; அச்சாக இருத்தல்; take after (an older relative); be the spitting image of someone. பேரன்தாத்தாவை