பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

உருக்குலைதல்

மெலிந்து போகச் செய்தல்; reduce someone; make one thin. 'நோய் அவர் உடலை உருக்குலைத்து விட்டது'. 2. சிதைத்தல்; damage (severely). புயல் வாழைத்தோப்பை உருக்குலைத்து விட்டது'. 3. ஆவணங்களை அழித்தல்; tamper with; destroy (evidence). சான்றாவணங்களை உருக் குலைத்தல் பெரும் குற்றம்'. உருக்குலைதல் வி. (v.) 1. நோய், கவலை போன்றவற்றால் மெலிந்து போதல்; (of one's body) be ravaged; be reduced. நோயினால் அவன் உருக்குலைந்து விட்டான்.2. ஒன்றின் உருவம் சிதைதல்; be mangled. 'நேர்ச்சையில் சிக்கிய ஊர்தி உருக்குலைந்து கிடந்தது.

உருக்கூட்டுதல் வி. (v.) ஒன்று கூட்டுதல்; ஒன்றாக்குதல்; to collect, amass, accumulate.

உருக்கெண்ணெய் பெ. (n.) உருக்கி வடித்த எண்ணெய்; oil prepared by boiling coconut milk. உருக்கொடுத்தல் வி. (v.) 1. உசுப் பேற்றுதல்; instigate; incite. 'உருக் கொடுத்துவிட்டால் போதும் எல்லா வற்றையும் அவனே செய்து விடுவான். 2. வடிவங்கொடுத்தல்; shaping. அவன் எண்ணத்திற்கு உருக்கொடுத்தான்'. உருக்கொள்ளுதல் வி. (v.) உருவாகுதல்; take form or shape. 'வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக உருக்கொண் டுள்ளது.

உருகுதல் வி. (v.) I. இளகுதல்; melt.

நினைத்து) ஏங்குதல்; pine (for); languish. 'மகனை நினைத்து மனம் உருகினான்.4. (நோய், கவலை, வேலையால்) உடல் மெலிதல்; become carewom. 'வேலை கிடைக்

காததால் ஆள் உருகி விட்டான். உருகுநிலை பெ. (n.) திடப்பொருள்நீர்ம நிலைக்கு மாறத் தொடங்கும் வெப்ப நிலை; melting point. 'தங்கத்தின் உருகுநிலை 1064° செ.கி. ஆகும்'. உருகுபதம் பெ. (n.) இளகுதற்குரிய பக்குவம் ; softness of condition, melting state. 'உருகுபதத்தில் கம்பியை வளைத்தான்.

பெ.எ. (adj.)

உருட்சிதிரட்சியான சதைப்பற்றோடு திடமான; stockily/ muscular. 'உருட்சி திரட்சியான ஆள்'. உருட்டச்சு பெ. (n.) குறிப்பிட்ட தாளில் எழுத்துகளின் வடிவில் உண்டாக்கும் துளை வழியாக மையைச் செலுத்திப் படிகள் (பிரதிகள்) எடுக்கும் முறை; stencil. 'இது உருட்டச்சு முறையில் உருவான நூல்.

உருட்டல்மிரட்டல் பெ. (n.) சினம், கடுமை வெளிப்படும் வகையில் அதட்டி அச்சுறுத்துதல்; brow beating; bullying. யாருடைய உருட்டல் மிரட்டலுக்கும் அஞ்சமாட்டேன் என்றார்.

உருட்டாலை பெ. (n.) கட்டடம் கட்டப் பயன்படும் கம்பிகளை உருவாக்கும் தொழிற்சாலை; steel rolling mill. உருட்டி திரட்டுதல் வி. (v.) பணம், பொருள் முதலியவற்றை இயன்ற வழிகளிலெல்லாம் சேர்த்தல்; scraping together (money); gathering up. 'மகனின் உயர்கல்விக்காகப் பணத்தை உருட்டி திரட்டி வைத்திருக்கிறார்.

‘பனிக்கட்டி உருகியது. 2. மனம் உருட்டிப் புரட்டுதல் வி. (v.) ஒரு செயல்

நெகிழ்தல்; be moved; melt (at heart). அம்மாவின் பேச்சைக் கேட்டு அவன் மனம் உருகிவிட்டது'. 3. (ஒருவரை

நிறைவேற தனக்குத் தெரிந்த எல்லா வழிமுறைகளையும் கையாளுதல்; moving heaven and earth (to accomplish something); adopting ingenious ways.