பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

உருப்படி

திருமணத்திற்கு உருத்துக்காரர்கள் அனைவரும் வந்திருந்தனர். உருப்படி பெ.(n.) 1. கணக்கிடக்கூடிய பொருள்; item, piece, any article admitting of counting, unit. 'சலவைக்கு எத்தனை உருப்படிகள்போட்டாய்?' 2.பயன்படும் பொருள்; article of value,

usefulthing. உருப்படியானபொருள். 3. இசைப்பாட்டு; piece of music. அவருக்கு நூறு உருப்படிகள் பாடம் உண்டு.

உருப்படியாக வி.அ. (adv.) 1. உயிருக்குத் தீங்கு இல்லாமல்; unhamed. பணம் போனால் போகட்டும், நீ உருப் படியாக வந்து சேர்ந்ததே போதும்'. 2.(பொருள்) சிதைவு அடையாமல்; intact; without getting damaged. இந்த நூலை உருப்படியாகக் கொண்டு போய் உரியவரிடம் கொடு'.

3. பயனுள்ள வகையில்; constuctively. ஒரு செயலையும் உருப்படியாகச் செய்யத் தெரியாதா?' . 4. ஒழுங்காக; properly. ஒரு தூவல்கூட உருப்படி யாக இல்லையா?'.

உருப்படுதல் வி. (v.) 1. நல்ல நிலை அடைதல்; prosper. 'நன்றாகப் படித்தால்தான் உருப்படுவாய் என்றார் ஆசிரியர்.2. திட்டம், ஒப்பந்தம் முதலியன நிறைவேறி நடைமுறைக்கு வருதல்; be useful; serve (a useful) purpose. இப்படியே போனால் இந்தத் திட்டம் உருப்படுவது ஐயம்தான். உருப்பெயர்த்தல் வி (v) ஒரு சொல்லைப் பிறமொழியெழுத்தில் எழுதுதல்; to

transliterate.

உருப்பெருக்காடி பெ. (n.) பொருளின் அளவைப் பெரிதாக்கிக் காட்டும் தன்மையுள்ள குவியாடி; magnifying glass; lens.

உருப்பெறுதல் வி. (v.) உருவெடுத்தல் பார்க்க.

உருப்போடுதல் வி. (v.) பல முறை படித்துப் படித்து நினைவில்வைத்துக் கொள்ளுதல்; மனப்பாடம் செய்தல்; learn by rote; mug up (something). பொருள் தெரியாமல் உருப் போடாதே'.

உருபன் பெ. (n.) மொழியியலில்

பொருள் அடிப்படையில் மேலும் பிரிக்க முடியாத சொல் அல்லது சொல்லின் பகுதி; mopheme. 'கண்கள் என்பதில் 'கண்'

- 'கள்' என்ற இரு உருபன்கள் உள்ளன'.

உருபு பெ. (n.) இலக்கணத்தில், பெயர்ச் சொல்லோடு சேர்ந்து வேற்றுமைப் பொருளையும் உவமைப் பொரு ளையும் காட்டப் பயன்படும் இடைச்சொல்; (in grammar) case. உருமறைப்பு பெ. (n.) உள்ளிருப்பது வெளியே தெரியாதபடி ஏற்படுத்தப் படும் அமைப்பு; cover. 'குழியில் தென்னையோலைகளைப் போட்டு உருமறைப்புச் செய்திருந்தார்கள்.

உருவ அமைதி பெ. (n.) வடிவ ஒழுங்கு; unity in fom. நாட்டுப்புறப் பாடல் களிலும் உருவமைதி உண்டு. உருவ எழுத்து பெ. (n.) சொற்களை, ஒலிகளைச் சித்திர வடிவில் குறிக்கும் எழுத்து முறை; hieroglyphics. பண்டைய எகிப்தில் உருவ எழுத்துகள் பயன்படுத்தப்பட்டன. உருவகப்படுத்துதல் பெ. (n.) I. உருவக மாகக் கூறுதல்; describe metaphorically. 'முகம், 'நிலவு' என்று உருவகப் படுத்தப்பட்டுள்ளது'. 2. இப்படி இருக்கும் அல்லது இருக்க வேண்டும் என்று கற்பனையாகத் தீர்மானித்தல்; conceive (of something or someone). வாழ்க்கை என்றால் மனைவி, மக்கள், சொத்து என்று தான் நாம் உருவகப்படுத்திக் கொள்கிறோம்'.