பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருவகம் பெ. (n.) உவமானத்தையும் உவமேயத்தையும் வேறுபடுத்தாமல் ஒன்றாகக் கூறும் முறை; metaphor. 'மதிமுகம் என்பது உவமை; முகமதி என்பது உருவகம்'.

உருவகித்தல் வி. (v.) உருவகப்படுத்துதல் பார்க்க.

உருவங்காட்டி பெ. (n.) கண்ணாடி; mira.

உருவடித்தல் வி. (v.) உருப்போடுதல்

பார்க்க.

உருவத்திருமேனி பெ. (n.) வடிவுடைய வராகக் கருதப்படும் கடவுள்; God, as assuming form or shape.

உருவப்படம் பெ. (n.) ஒருவரின் முழு உருவத்தைக் காட்டும் பெரிய படம்; life size portrait. 'திருவள்ளுவரின் உருவப்படம் திறந்துவைக்கப்பட்டது. உருவப்பொம்மை பெ. (n.) வைக்கோல் போன்ற பொருள்களால் செய்யப் படும் உருத்தோற்றம் (கொடும் பாவி); effigy.

உருவம் பெ. (n.) 1. வெளித்தோற்றம்; முழு உடல்; figure; body; shape. யானை உருவத்தில் பெரியது'. 2. தெய்வம் அல்லது மக்கள் வடிவத்தின் படி (நகல்);picture; image; idol. 'குழந்தையின் உருவத்தை அட்டைப்படத்தில் போட்டிருந் தார்கள். 3.நிழல் வடிவம்; figure. இருட்டில் தெரிந்த உருவம் நகரத் தொடங்கியது.

உருவ வழிபாடு பெ. (n.) கடவுளுக்கு வடிவம் அமைத்து வழிபடும் முறை; idol worship.

உருவாக்குதல் வி. (v.) 1. புதிதாக ஒன்றை அமைத்தல்; நிறுவுதல்; தோற்று வித்தல்; build up; fom; make; found; establish (a religion, etc.,). சிற்பி அழகான சிற்பங்களை உருவாக்கி யிருந்தார்.2(ஒருவர் தன் முயற்சி யால் குறிப்பிட்ட துறையில் அல்லது

உருவுதல்

81

முறையில்) மற்றொருவரை வெளிக் கொண்டு வருதல்; produce (disciples, students, etc.,). அவர்சிறந்த மாணவர் களை உருவாக்கிய பேராசிரியர்'. 3.உண்டாக்குதல்; ஏற்படுத்துதல்; draw up (plan, scheme, etc.,) enact; formulate (ideas, etc.,). மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசு பலதிட்டங்களை உருவாக்கியுள்ளது'. உருவாகுதல் வி. (v.) I. தோன்றுதல்; உண்டாதல்; come into existence; appear; evolve; be established. கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் உருவாகியுள்ளது. 2. (ஒருவருடைய முயற்சியால்) வெளிவருதல்; be produced come out. 'இந்த ஆசிரியரால் பல மாணவர்கள் உருவாகியிருக் கிறார்கள்.3. எழுதல்; ஏற்படுதல்; உண்டாதல்; be formed; get evoked. உள்ளத்தில் உருவாகும் உணர்ச்சி களைப் புதினம் படம் பிடித்துக் காட்டியுள்ளது.

உருவாடுதல் வி. (v.) சாமியாடுதல்; give oracular responses while being supposedly possessed by a deity. ஏன் எதற்கெடுத்தாலும் உருவாடு கிறான்? (இலங்.)

உருவாரம் பெ. (n.) அய்யனார்கோவிலில் நேர்த்திக் கடனாகச் செய்து நிறுத்தி வைக்கப்படும் உருவம்; votive figurines placed at the temple of Ayyanar. உருவுதல் வி. (v.) I. பற்றிக் கொண் டிருக்கும் ஒன்றிலிருந்து ஒன்றை வலுவாக இழுத்தல் ; pull (quickly) out (from a bundle, sheaf, etc.,). கட்டி லிருந்து ஒரு செய்தித்தாளை உருவி எடுத்துப் போட்டான்'. 2. அழுத் தித் தடவுதல்; பிடித்து நீவுதல்; slide one's fingers along with something, with a pressing motion. 'சுளுக்குப் பிடித்த இடத்தை மெதுவாக உருவி