பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

உருவெடுத்தல்

விட்டான். 3. காம்பிலிருக்கும் இலை, கதிரிலுள்ள நெல் போன்ற வற்றை இழுத்து ஒன்றாக எடுத்தல்; sliding along; strip off (leaves, grains,

etc.,) by gripping with one's finger. *கறிவேப்பிலை உருவிப் போட்டுத் தாளித்தாள்'.

உருவெடுத்தல் வி. (v.) 1. ஒன்று மற்றொன்றாக மாறுதல் அல்லது வெளிப்படுதல்; transform (into something); develop. 'அவனது முயற்சி வெற்றியாக உருவெடுத்தது'. 2. வேறொரு வடிவம் எடுத்தல்; take the form (of someone or something mentioned. கூட்டுப்புழு பட்டாம் பூச்சியாக உருவெடுத்தது'. உருவேற்றுதல் வி. (v.) I. ஒருவரைத் தன்வழிக்குக் கொண்டு வருவதற் காக ஒன்றை மீண்டும் மீண்டும் சொல்லி அவர் மனத்தில் பதிய வைத்தல்; indoctrinate; get something into someone's head. 'என்ன சொல்லி

அவனை உரு வேற்றியிருக்கிறாய்?'. 2. இறைவனை நினைத்து மந்திரத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லுதல்; chant mantrams.

உருளி பெ. (n.) வாய் அகன்ற, உருண்டை வடிவ, உயரம் குறைந்த வெண்கல ஏனம்; spherical bronze vessel with a wide mouth. நிலைவெள்ளி வராத காலத்தில் சமைப்பதற்கு உருளியைப் பயன்படுத்தினார்கள்.

உருளுதல் பெ. (n.) I. (படுத்த நிலையில்) பக்கவாட்டில் ஒரே திசையில்

மீண்டும் மீண்டும் புரண்டு நகர்தல்; roll over. 'குழந்தை உருண்டு வந்து என் பக்கத்தில் படுத்திருந்தது'. 2. இடம் பெயர்தல்; move rolling along a surface. காசு கீழே விழுந்து உருண்டு சென்றது. 3.கீழ் நோக்கிப் புரண்டு விழுதல்; (of a vehicle) skid; tumble; roll down. 'மலைப்பாதை வளைவில்

திரும்பும்போது பேருந்து பள்ளத்தில் உருண்டது.4.பெயர் அடிபடுதல் அல்லது தொடர்புபடுத்தப்படுதல்; be dragged (into an affair). தேவை யில்லாமல் இந்தச் சண்டையில் என் தலைதான் உருளுகிறது.

உருளை பெ. (n.) I. நீள் உருண்டை (வடிவம்); cylindrical. 'உருளை வடிவ ஏனம்' . 2. நீள் உருண்டை வடிவில் உள்ள பொருள்; anything in cylindrical shape. 'மாழை (உலோக) உருளை யின் மேல் வைத்த பலகையில் யானை ஏறி நின்றது. 3. உருளைக் கிழங்கு; potato. 'உருளை விலை உயர்ந்துள்ளது'.

உருளைக்கல் பெ. (n.) பரற்கல்; pebble. உருளைக்கிழங்கு பெ. (n.) பழுப்பு நிற மெல்லிய தோலைக் கொண்ட, உண்ணத்தக்க உருண்டை வடிவக் கிழங்கு; potato.

உருளைப்பிரண்டை பெ. (n.) கோப் பிரண்டை; a long round and smooth creeper of vitis.

உருளைப்புழு பெ. (n.) மக்களின், விலங்கு களின் வயிற்றுக்குள் காணப்படும், மண்புழுவைப் போன்ற தோற்ற முடைய, நோயைப் பரப்பும் ஒட்டுண்ணி வகையைச் சார்ந்த புழு;

nematode.

உரை பெ.(n.) I.பேச்சு; speech. ஆளுநர் உரையாற்றினார். 2. இலக்கிய, இலக்கண நூல்களுக்கு எழுதப்படும் விளக்கம்; explanatory commentary on literary or grammatical works. திருக்குறளுக்குப் பலர் உரை எழுதியுள்ளனர்.

உரைக்கோள் பெ. (n.) உரையாசிரி யர்களின் கருத்து; interpretation given

to the text by a commentator. உரைக்கோவை பெ. (n.) ஒரு பொருளைப் பற்றிய பலருடைய கட்டுரைத் தொகுப்பு; anthology (of writings of