பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

different persons); symposium. 'அகராதியியல் பற்றிய உரைக் கோவை வெளியிடப்பட்டது. உரைகட்டுதல் வி. (v.) உரை (விளக்கம்) எழுதுதல்; to comment on a work. உரைகல் பெ. (n.) 1. தங்கத்தின் தரம் அறியத் தேய்த்துப் பார்க்க உதவும் சிறிய, கருமை நிறக் கல்; touchstone used by goldsmiths. 2. தரம் அறிவதற் SIT GOT FIT GOT; standard of comparison;

touchstone. 'சோழர்காலச் சிற்பக் கலைக்குத் தஞ்சைப் பெரிய கோவில் ஓர் உரைகல்வாகும்'. 3. மகுத் தரைக்கும் சிறு கல்; small stone for rubbing pills and other forms of medicine into powder.

உரை கலங்குதல் வி. (v.) பேச்சுத் தடுமாறுதல்; to be confused in speech. உரைகாரர் பெ. (n.) உரையாசிரியர் பார்க்க.

உரைகோள் பெ. (n.) நூலுக்குச் செய்யும் உரையில் சொல்லப்படுவன; the contents, description in a commentary. உரை சொல்லல் பெ. (n.) இறந்தார் முன்பு மாரடித்துக்கொண்டு பெண்கள் புலம்பிக் கற்பனையாகப் பாட்டுச் சொல்லுதல்; மாரடிப்புப் பாடல்; mournful singing by the females lamenting at the funeral with rhythmic breast beating for the departed soul. உரைத்தல் வி. (v.) 1. தெரிவித்தல்; கூறுதல்; state, express. 'இந்தப் பணியை முடிக்க எவ்வளவு காலம் ஆகுமென்று அறுதியிட்டு உரைக்க இயலாது. 2.தங்கத்தின் தரம் அறியும் பொருட்டுத் தேய்த்தல்; rub (gold ona touchstone}. 'அடகுக் கடையில் பொன்னை உரைத்துப் பார்த் தார்கள். 3.சுக்கு முதலியவற்றைக் கல்லில் உரசுதல்; rub (dried ginger, etc., on a wet stone to get a small amount of paste). 'வசம்பை உரைத்துப் பாலில் கலந்து குழந்தைக்குக் கொடு'.

உல்லம்

83

உரைநடை பெ. (n.) யாப்பில் அமையாத, இயல்பான எழுத்து மொழி நடை;

prose.

உரைநயம் பெ. (n.) உரையின் இனிமை; excellence of the exposition on a work. உரைபாடம் பெ. (n.) மூலமும் உரையும்; text with commentary.

உரைமெழுகு பெ. (n.) உரைத்த பொள், வெள்ளிகளை ஒற்றும் மெழுகு; darkish kind of wax, used by goldsmiths as well as by assayers in cash bazaars to take up the dust falling from precious metals that are tested on the touchstone. உரையறிகருவி பெ. (n.) 2. உரைகல்; touch stone. 2. மாற்தறிவிக்கும் ஆணி; touch needle,

உரையாசிரியர் பெ. (n.) இலக்கிய, இலக்கண நூல்களுக்கு விளக்கம் எழுதுவோர்; commentator. உரையாடல் பெ. (n.) 1. இருவர் அல்லது இருவருக்கு மேற்பட்டோர் தங்க ளுக்குள் பேசிக்கொள்ளும் பேச்சு; conversation. 2. சிறுகதை, புதினம் போன்றவற்றில் பேச்சாக அமையும். பகுதி: dialogue in a story, novel, etc., உரையாடுதல் வி. (v.) இருவர் அல்லது இருவருக்கு மேற்பட்டோர் இயல் பாகத் தங்களுக்குள் பேசிக் கொள்ளுதல்; talk, converse.

உரையேடு பெ. (n.) உரைபாடம் பார்க்க. உரைவன்மை பெ. (n.) பேச்சுவன்மை; eloquence, oratorical power.

உல்லம் பெ. (n.) கடலிலிருந்து இனப் பெருக்கத்திற்காக ஆறுகளுக்கு வருகிற, ஏறக்குறைய முக்கால் மீட்டர் நீளம் வரை வளருகிற வெள்ளி நிற மீன்; hilsa.