30
முல்லை - எதை?
- - - - - “ : 5-9 : பச்சை :- நல்லவர் போற்றிடும் நாட்டியக்கலையை.
இத பாரு, அவரைப்போல நான் பாடுவேன்! அவளைப்போல ஆடனும், எங்கே?
[பாடுகிருன்) காதலாடும் நெஞ்சிலே கற்பனைகள் பொங்குதே காசை எண்ணும் போதிலே அத்தனையும் மங்குதே!
முல்லை : (சிரித்து) ஐயையோ! ப்ே துமே!
நிறுத்து ! நிறுத்து கட்டிப்போட யாராச்சும் கவுத்தை தூக்கிக்கிட்டு வந்திடப் போருங்க !
பச்சை :- முல்லை ! என்னை என்னு கழுதைன்னு நெனச்சுகிட்டே?
முல்லை :- இல்லையே! அதுக்கு நாலு காலு, ஒரு வாலுல்ல இருக்கும் !
பச்சை : அப்படின்ன எ ன் னை ஏன் நிறுத்தச் சொன்னே? நீ ஆடத் தெரிஞ்சவ; நான் பாடத் தெரிஞ் சவன், இரண்டு பேருமா சேர்ந்து ஏதோ அப்படியே கச்சேரி கிச்சேரின்னு காலட்சேபம் பண்ணலாம்னு நெனச்சா...... மொகரையப்பாரு எ ன் னை வி ட தி பிரமாதமா பாடுவியோ?
முல்லை :- நான் அப்படியொண்ணும் சொல்ல லியே பச்சை ஒன்னை ஒ ண் ணு கேட்கணும்னு நெனச்சேன். ராத்திரி முழுக்க நீ எங்கே இருந்தே?