பக்கம்:நந்திவர்மன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

பச்சை :- ஏன்? ஒந்தங்கச்சிமாரு ஊட்லேதான்!

என்னுேட அருமையும் பெருமையும் அவுங்களுக்கில்ல தெரியுது!

முல்லை :- எங்கேயாவது ஒரு பக்கம் தெரியட்டும் ! அப்புறம் சொல்லு !

பச்சை :- ராத்திரி முழுதும் அங்கே என்ன நடந் தது தெரியுமா? பாட்டு பாட்டு பாட்டு! சும்மா இசைப்பாணர் போல பாட்டாப் பொழிஞ்சி தள்ளிட் டேன் நீ பகடி பண்றே ! தங்கச்சிமாருங்க எவ்வளவு சந்தோஷப்பட்டாங்க தெரியுமா?

முல்லை :- அப்போ, எங்கம்மாகிட்ட நாஞ் சொன்ன திலே எள்ளுமொனையளவும் தவறில்லே அட பாணு! நான் சொன்னது அப்படியே பலிச்சுட்டுதே!

பச்சை - (ஆவலோடு) என்ன ? என்ன ? என்ன சொன்னே முல்லை? ஒங்க ஆட்டுக்குக் கேட்டுதா பாட்டு? யாரோ பெரிய ஆளு பாடருப்லே இருக்குதுன்னு, நெனைச்சிருப்பீங்க ? இல்லியா? (மகிழ்வுச் சிரிப்பு)

முல்லை - ஆமா, ஆமா, பாடறது பாருங்கிறப் பத்தி எங்கம்மா, மத்தவங்க, நானு எல்லோரு மா விவாதம் பண்ணினேமே !

பச்சை :- விவாத மா? ஏம் பாட்டுக் குரல் கேட்டா? அடாடா! நான் பாணன்! இசைப்பாணனே தான் ! எப்படி எந்தெறமை? ஆமா, என்னைப்பத்தி என்னுன்னு பேசிக்கிட்டீங்க?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/33&oldid=671983" இலிருந்து மீள்விக்கப்பட்டது