பக்கம்:நந்திவர்மன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

முல்லை :- கேளு (பாடுகிருள்)

ஈட்டுபுகழ் நந்தி பாண ! எங்கையர்தம் வீட்டிலிருந்து பாட விடிவளவும்-காட்டிலழும் பேயென்றாள் அன்னை, பிறர் நரியென்றார் தோழி நாயென்றாள் ; நீஎன்றேன் நான் !

LI# :- அவமானம் அவமானம்! பெருத்த அவமானம்! முல்லை ஒம் முந்தானையக்கொடு, இப்பவே சுருக்குப் போட்டுக்கிட்டு உன் எதிர்லேயே செத்துப் போறேன்!

(முந்தானையைப் பிடிக்கிருன்)

முல்லை :- (அனுதாபத்தோடு) வேணும் பச்சை ! இதுக்காகவா சாவறது ? தற் கொலை செஞ்சவங்க, பிசாசா அலைவாங்களாமே ! என் ராசாவல்ல ; வேணும்!

பச்சை :- என் குரலைக் கேட்டு நரின் னிங்க என்னை | ந | னு ன் ைஒந்தோழி! செத்தப்பறமா? இப்பவே பிசாசுன்னு சொல்லிட்டாளே ஒங்கம்மா !

முல்லை :- எனக்குத் தெரியும் பச்சை! நான் அப்படி யெல்லாம் சொல்லலியே! நீயின்னுதான் பச்சை சொன் னேன் !

பச்சை - 1 ஐயோ அதுதான் முல்லை கொல்லுது என்னை கத்தறது பேயல்ல, நரியல்ல, நாயல்ல, நாந் தான்னு சொன்னு அதையெல்லாம்விடக் கேடுகெட்டவ ஒல்ல ஆயிட்டேன் ! ஐயோ! பொழைக்கனுமா நானு ? உடு, உடு முந்தானையை ! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/34&oldid=671984" இலிருந்து மீள்விக்கப்பட்டது