காட்சி 8.
இடம் : காஞ்சி அரசவை.
காலம் : முற்பகல்.
|சிங்காதனத்தில் மன்னரும், மகா ராணி சங்கா தேவியும் இருக்க, மந்திரி பிரதானியர் சூழ்ந்திருக்கின்றனர். நடனம் நடைபெற்று முடிகின்றது.)
பெருங் - (எழுந்து) மன்னர் வாழ்க பல்லவமா நந்தி வாழ்க! காடவர்கோன் கழற்சிங்கன் வாழ்க! வாழ்க!!
(பாடுகிறார்-விருத்தம்) வரை பெரிய மத்தாக வாளரவம் கயிருக திரையிரியக் கடல் கடைந்து திருமகளைப்
படைத்தனையே உலகொடு நிலவிய ஒருபுகழ் சுமந்தனையே நிலமகள் கேள்வனும் நேர்கழலினுைம் நலமிகு கச்சியார் கோவென்பவே நலமிகு கச்சியார் கேவாயினனும் சிலைமிகு தோள் சிங்கன் அவன் என்பவே செரு விடையானை அவன் என்பவே.
கந்தி : வாழ்க தமிழ்! வாழ்க புலவர் பெருந் தேவப் புலவரே ! தமிழ்ச் சுவையும், வீரச்சுவையும் பாடல்களிலே பொங்கி வழிகின்றன, பாராட்டுகின் றேன். நீர் தகுதி வாய்ந்த தமிழ்ப் புலவர்! பல்லவ நாடெங்கும் தமிழ் தழைக்கச் செய்யும். அதற்கென நிரந் தர நிதியளிப்போம். அமைச்சரே !