பக்கம்:நன்னெறி நயவுரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக்கப் புதுவை அரசுக் கல்வித் துறையின் ஒப்புதல் பெறுவதற்காகக் கல்வி இயக்குநரிடம் சென்று முறையிட்டார். முத்தியால் பேட்டையில் பெண்கள் உயர்நிலைப்பள்ளி இல்லை யெனில், அவ்வூர் ஏழைப் பெண்பிள்ளைகள் புதுவை நக ருக்கு வண்டியில் சென்று படித்துவரும் வாய்ப்பு இல்லா மல், படிப்பைத் தொடக்கக் கல்வியோடு நிறுத்திவிடுவர் என்பதைச் சுட்டிக் கூறி ஒப்புதல் வேண்டினார். (அப் போது யானும்-சுந்தரசண்முகன்-உடனிருந்தேன்). பள்ளி உயர்நிலைப் பள்ளியாக ஒப்புதல் பெற்றுச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது;'சின்னாத்தா பெண்கள் உயர்நிலைப் பள்ளி' என்னும் பெயர் வழங்கப்பெற்றுள் ளது. மேல்நிலைப் பள்ளி: பின்னர், உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளி, urs (Higher Secondary School) a uri š5 605lh ustantirff முதலியார். அதற்காக, (தம் மகனுக்கு மூன்று பெண் குழந்தைகள் இருப்பதையும் பொருட்படுத்தாமல்) இரண் டரை இலட்சம் உரூபா செல்விட்டுப் புதிய கட்டிடம் வாங்கித் தந்தும் மேற்கொண்டு வேண்டிய வசதிகளைச் செய்தும், வள்ளல் என்னும் பெயருக்கு மேலும் முத்திரை யிட்டார். சிறார் பள்ளி: முத்தியால் பேட்டையில் இவர்களின் வள்ளன் மையால் மகளிர் மேல்நிலைப் பள்ளி நடைபெற்றுக் கொண்டிருக்கவும், குறைந்த செலவில் குழந்தைகள் படிக்கச் சிறார் பள்ளி ஒன்று தொடங்கவேண்டுமென அமைப்புக் குழுவினர் ஒரு கூட்டம் கூட்டினர். அப்போது முதலியாரை நோக்கி, இப்பள்ளிக்கு நீங்கள் என்ன உதவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நன்னெறி_நயவுரை.pdf/12&oldid=773006" இலிருந்து மீள்விக்கப்பட்டது