பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 75 சைவ சமயப் பெரியார்களான, திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசகர் ஆகி யோரும், திருமங்கை யாழ்வார் உள்ளிட்ட பன்னிரு ஆழ்வார்கள் பக்தி இலக்கியங்களை இயற்றி மக்களைக் கவர்ந்தனர். இவர்களையடுத்து, ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்னும் உயரியதத்துவத்தை மக்களிடம் பரப்பிய திருமூலர் முதலான சித்தர்கள், சைவ, வைணவக் கொள்கையில் பொதிந்து நின்ற சமயச் சடங்குகளையும் வைதீக வழிபாடுகளையும், சாடிவந்தனர். இத்தகைய சூழ்நிலையில்தான் (கி.பி. 12 - ஆம் நூற்றாண்டின் இறுதியில்) நபிகள் நாயகம் ஸல்லல்லாகு அவர்களது பேரனாரும், மதீனமா நகரின் அதிபதியுமாகிய சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்கள், பாண்டிய நாட்டுக்கு வந்து. இறுதித்துதர், வெளிப் படுத்திய இறை மறையையும் அன்னரது வழிமுறைகளையும் மக்களிடையே பரப்புவதற்காக முயன்றார். காயல்பட்டினம் பகுதியில் அவரது முயற்சி பூரணமாக வெற்றி பெற்றாலும் மதுரை, பெளத்திர மாணிக்கப்பட்டிணம் என்னும் பெரிய பட்டிணப்பகுதியில் அப்போதிருந்த பாண்டியர்கள் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தி சுல்த்தான் அவர்களோடு பெரும்படையுடன் மோதினர். பாண்டிய நாட்டு வரலாற்றில், அதுவரை, நிகழ்ந்திராத சமயப்படுகொலை இப்பொழுது நடந்துள்ளது. ஏனெனில் அதுவரை தங்களது சமயத்தை மக்களிடம் போதித்த சமயச்சான்றோர் எவரையும் பாண்டியர்கள், தங்களது மதத்தின் பெயரால் அழித்து ஒழிக்கவில்லை. இத்தகைய வீரமரணம் எய்தியவர்கள் அரபி மொழியில் ஷகீது என அழைக்கப்படுகின்றனர். அதாவது உயிர்த் தியாகி தங்களது இன்னுயிரை இறைவனது பாதையில் இறைவனுக்காக ஈந்தவர் என்பதாகும். இத்தகையவர் பெரும்பாலும் இஸ்லாம் மதத்தை நிலை நிறுத்துவதற்காகப் பல மதப் போர்களில் (ஜிகாதுகளில்) பங்கெடுத்து உயிரை அர்ப்பணித்தவர்கள் (திருகுர் ஆன் 5 13) என்பதை இஸ்லாமிய வரலாறு தெரிவிக்கின்றது.