பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 Յ நபிகள் நாயகம் வழியில் மேலும் இறைவனது திருமறையில் இங்ங்னம் உயிர்த்தியாகம் செய்தவர்கள் இறந்துவிடவில்லை என்றும் அவர்கள் இவ்வுலகில் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டிருப் பதுடன் அவர்களுக்கு இறைவனால் உணவு வழங்கப்படுவதாகவும் குறிக்கப் பெற்றுள்ளது. (திருக்குர் ஆன் 57 19) வீரர்களைப் போற்றி வருவது மனித குலத்தின் மரபு ஆகும். நமது நாட்டில் சங்க காலத்தில் சமுதாய நன்மைக்காகப் போரிட்டு உயிர் துறந்தவர்களை என்றென்றும் நினைவுபடுத்தி மக்கள் நடுகல் என்ற வடிவில் கல்லினை நட்டு இறந்தவர்களது பேரும் புகழையும் பொறித்து வழிபட்டனர் என்பதைப் பல இலக்கியங்கள் தெரிவிக் கின்றன. இவர்களைப் 'பட்டவர்கள்' என்றும் போரில் அவர்களது நினைவிடங்களில் உள்ள நடுகல் அல்லது வீரக்கல் வழிபாட்டுக் குரியதாகவும் ஆக்கப்பட்டிருந்தது. கொங்கு நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் இத்தகைய நடு கற்கள் பலவற்றை வரலாற்று வல்லுநர்கள் கண்டுபிடித்துத் தெரிவித்துள்ளனர். அண்மையிலுள்ள கன்னட நாட்டிலும் இத்தகைய வீரர்களுக்குரிய வணக்கம் இருந்ததை அங்குள்ள மாஸ்திக்கல் மூலம் தெரிய வருகின்றது. சமுதாய நலனுக்காகப் பாடுபட்டவர்களுக்கு மக்கள் சிறந்த மதிப்பும் மரியாதையும் நல்கியிருக்கும் பொழுது மனிதர்களைப் படைத்த இறைவனுக்காக, இறைவனது நெறிமுறைகளைப் பேணிப் பாதுகாப்பதற்காக உயிரை அர்ப்பணித்தவர்களது நினைவுகளைப் போற்றிப் புகழ்வது இயல்புதான். இறைவனது சன்மார்க்க சமயமாகிய இஸ்லாத்தைப் பரப்புவதிலும் அதனை நிலை நிறுத்துவதில் ஏற்படும் இடர்பாடுகளுக்கு எதிராகத் தமது இன்னுயிரை நல்கிய புனிதர் செய்யது இபுராகிம் அவர்களது அர்ப்பணிப்பையும், தியாகத்தையும் அறிந்த சேதுபதி மன்னர் கட்டையத் தேவர் என்ற குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி அவர்கள் பின்னர் ஏர்வாடியில் அமைந்துள்ள சுல்த்தான் செய்யது இபுராகிம் ஷகீது அவர்களது நினைவிடமாகிய ஏர்வாடி